வைகோ புகாரை மறுக்கிறார் கருணாநிதி
சென்னை:
கூட்டணியில் தான் கேட்ட தொகுதிகளை தரவில்லை என வைகோ கூறியுள்ள புகாரை திமுக தலைவர் கருணாநிதி மறுத்துள்ளார்.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை மாலை நிருபர்களை சந்தித்த கருணாநிதி கூறியதாவது:
வைகோ தனது கட்சி வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாகக் கூறி கொடுத்த இரு பட்டியல்களில் இருந்து தான் சீட்களை ஒதுக்கினோம்.அவர் கேட்ட தொகுதிகளில் இருந்து தான் 18 சீட்கள் ஒதுக்கப்பட்டன. மீதம் 3 தொகுதிகளை ஒதுக்குவதில் தான் பிரச்சனைஉள்ளது. இது தொடர்பாக இப்போது கூட பேசத் தயாராக இருக்கிறோம்.
ஆனால், தான் கேட்டதில் 12 தொகுதிகளை மட்டும் கொடுத்துவிட்டு மீதம் 9 தொகுதிகளை எங்கள் இஷ்டத்துக்கு அவருக்குக்கொடுத்துள்ளதாக வைகோ கூறுவது தவறு.
திமுகவை மதிமுக குறை கூறி வருவதும் வருத்தம் தருகிறது. இது போன்ற செயல்கள் கூட்டணியில் தேவையில்லாத குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும். கூட்டணியை யாராவது விமர்சிப்பதை நினைத்தாலே என் மனம் வலிக்கிறது என்றார் கருணாநிதி.
ஊழல் குற்றம் புரிந்தவர்களை கூட்டணியில் சேர்த்தது தவறு என கூட்டணியிலிருந்து விலகிய வாழப்பாடி ராமமூர்த்திகூறியுள்ளாரே என நிருபர்கள் கேட்டபோது, அதற்கு கருணாநிதி பதிலளிக்கவில்லை.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications