விண்வெளி ஆய்வு: இந்தியாவுக்கு அமெரிக்க அமைப்பு எதிர்ப்பு
இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3.45 மணி முதல் இரவு 7.45 மணிக்குள்விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளித்துறை அறிவித்துள்ளது.
இதனை ஏவுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந் நிலையில் இந்தியாவுக்கு விண்வெளி ஆய்வு, ராக்கெட் தொடர்பான தொழில்நுட்பங்களை அளிக்கவேண்டாம் என அமெரிக்க அரசுக்கு ஹெரிடேஜ் பவுண்டேசன் என்ற அமைப்பு யோசனை கூறியுள்ளது.
இந்த அமைப்பு இப்போது ஆட்சியில் உள்ள ஜார்ஜ் புஷ்சின் குடியரசுக் கட்சிக்கு நெருக்கமானது என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்த அமைப்பின் அறிக்கை விவரம்: ராக்கெட் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு அளிப்பது இந்தியாவின்ஏவுகணைகளை மேம்படுத்த உதவிவிடும் என இந்த அமைப்பு கூறுகிறது. அதே போல இந்தியாவுக்கு ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைக்கச் செய்ய அமெரிக்கா உதவுவது நல்லதல்ல.இது அமெரிக்காவின் நலனுக்கே எதிரானதாகப் போய்விடும்.
சீனவுக்கு விண்வெளி ஆய்வில் உதவினோமா. ராக்கெட் தொழில்நுட்பத்தைத் தந்தோம். ஆனால், அந் நாடு அதைஏவுகணை உற்பத்திக்குப் பயன்படுத்திக் கொண்டுவிட்டது. அதே நிலை தான் இந்தியாவுக்கு உதவினாலும்ஏற்படும்.
இந்தியா அணு குண்டு தயாரிப்பதிலும், தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளான ஐ.சி.பி.எம்கள் (இன்டர்கான்டினென்டல் பாலிஸ்டிக் மிசைல்ஸ்) தயாரிப்பலும், பல முறை பயன்படுத்த இயலும் மல்டிபிள் என்ட்ரிடார்கெட் வெகிக்கிள் ரக ஏவுகணைகளைத் தயாரித்து வருகிறது. சீனாவை மட்டுமல்லாமல் பிற நாடுகளையும்தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளைத் தயாரிப்பதில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
இந்தியாவின் செயற்கைக் கோள்கள் தயாரிப்பிலும் நாம் உதவ வேண்டியதில்லை. ஏனெனில், ஏவுகணைகளைவழிநடத்திச் சென்று தாக்க வைக்க இந்த செயற்கைக் கோள்களை இந்தியா பயன்படுத்த வாய்ப்புள்ளது என்றுகூறப்பட்டுள்ளது.
இந்தியா தனது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை ஏவும் நிலையில் வந்துள்ள இந்த அறிக்கை மிகுந்த முக்கியத்துவம்பெற்றுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications