திமுக ஏமாற்றிவிட்டது: வைகோ குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தொகுதிகளை ஒதுக்கிக் கொள்வதில் திமுகவுக்கும் மதிமுகவுக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டுளளது.

நாங்கள் எங்களுக்கு ஒதுக்கக் கோரிய 21 தொகுதிகளில் 12 தொகுதிகளை மட்டும் ஒதுக்கிவிட்டு எங்களுக்கு வெற்றிவாய்ப்பில்லாத 9 இடங்களை தி.மு.க. எங்கள் தலையில் கட்டிவிட்டுவிட்டது என மதிமுக புகார் கூறியுள்ளது.

மதிமுக தலைவர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் கேட்ட தொகுதிகளில் 12 மட்டும் தான் எங்களுக்குவழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட மற்ற 9 தொகுதிகளும் நாங்கள் கேட்காத இடங்களாகவே உள்ளதுவருத்தமளிக்கிறது எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து வைகோவை நிருபர்கள் சந்தித்து அவரது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துக் கேட்டனர். ஆனால், இதற்குபதிலளிக்க மறுத்த வைகோ, கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது. அது தொடர்ந்து நடக்கும். அதில்தான் முடிவெடுக்கப்படும்.

நாங்கள் கேட்ட 18 இடங்களைத் தந்துவிட்டதாகவும், 3 இடங்களில் தான் பிரச்சனை உள்ளது எனவும் திமுக தேர்தல் குழுத்தலைவரும் கருணாநிதியின் வலதுகரமுமான அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியிருப்பது பொய்யான தகவல் என்றார் வைகோ.

மதிமுக முதலில் 43 இடங்களை திமுகவிடம் கேட்டது. இத்தனை இடங்கள் தரமுடியாது என திமுக கூறிவிட்டது. இதையடுத்துநாங்கள் கேட்கும் தொகுதிகளைத் தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் 21 தொகுதிகளை ஏற்க மதிமுக ஒப்புக் கொண்டுதிமுக கூட்டணியில் சேர்ந்தது.

இப்போது மதிமுகவின் முகத்தில் கரிபூசியிருக்கிறது திமுக. இதற்கு மதிமுக தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக்கிளம்பியுள்ளது. நேற்று சென்னையில் மதிமுக தொண்டர்கள் திமுக தலைவர் கருணாநிதியைக் கண்டித்து சாலை மறியல்போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+