ஷார்ஜா கிரிக்கெட்: இந்தியாவின் முடிவுக்கு எதிர்ப்பு
இஸ்லாமாபாத்:
ஷார்ஜா போட்டியில் பாகிஸ்தானுடன் ஆட இந்திய அணிக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.
இதனை பாகிஸ்தான் கடுமையாக விமர்சித்துள்ளது.
ஷார்ஜா கிரிக்கெட் போட்டி தொடர் ஆண்டுக்கு இருமுறை நடைபெறும். இதில் ஒவ்வொரு தொடரின் போதும் மூன்று அணிகள் கலந்து கொள்ளும்.
வளைகுடா நாடுகளில் நடத்தப்படும் ஒரே கிரிக்கெட் தொடர் இந்த ஷார்ஜா கிரிக்கெட் தொடர்தான். கடந்த 1983ம் ஆண்டு முதல் இது நடந்து வருகிறது.
17 ஆண்டுகளில் 167 ஒரு நாள் போட்டிகள் இந்த ஷார்ஜா கிரவுண்டில் நடைபெற்றுள்ளது ஒரு சாதனை அளவாகும்.
இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகள் பரபரப்பானவையாக இருக்கும். முஸ்லீம்கள் அதிகம் உள்ள ஷார்ஜாவில்பாகிஸ்தானிய அணிக்கு ஆதரவு அதிகம். ஆண்டுக்கு ஒரு முறையாவது இந்திய அணி இந்த போட்டிகளில் கலந்து கொள்வது வழக்கம்.
ஆனால், தற்போது இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாட இந்திய அரசு அனுமதி மறுத்து வருகிறது. இதற்கு காரணம் கடந்த 99ம்ஆண்டு பாகிஸ்தான் தூண்டுதலால் நடைபெற்ற கார்கில் போரும், காஷ்மீரில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் ஆதரவிலான தீவிரவாதம் ஆகியவையே.
இதனால், இரு நாடுகளுக்கும் இடையே ஆண்டு தோறும் கனடா நாட்டின் டொரண்டோ நகரில் நடைபெறும் போட்டித் தொடர்கள் கடந்த 2 ஆண்டுகளாகநடைபெறவில்லை.
இந்நிலையில், ஷார்ஜா கிரிக்கெட் போட்டி அமைப்பாளர்கள், இந்தியா - பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையே ஷார்ஜா போட்டித் தொடருக்குஏற்பாடு செய்து இருந்தனர்.
ஏப்ரல் 8ம் தேதி தொடங்க இருந்த இந்த போட்டியில் இந்திய அணி பங்கேற்க இந்திய அரசு அனுமதி மறுத்து விட்டதாக பத்திரிகைகளில் செய்திகள்வெளியாகின.
இதனால், கொந்தளித்து போன பாகிஸ்தான் ரசிகர்கள் இந்தியாவின் இத்தகைய போக்கை மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேவையானநடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகின்றனர்.
இந்திய அணியுடன் இனி பாகிஸ்தான் அணி ஒரு போதும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாது என கொதிக்கிறார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் தாகிர் ஜியா.
பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது குறித்து இந்திய அரசு பதில் அளிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏப்ரல் 30ம் தேதி வரை காலக்கெடு விதித்துஉள்ளது.
அது வரை ஜியா பொறுத்து இருக்க வேண்டும். அதைவிடுத்து இவ்வாறு கருத்து தெரிவித்து உள்ளது தவறானது என்கிறார் பாகிஸ்தான் கிரிக்கெட்விமர்சகர் தன்வீர் அஹமது.
ஹாக்கி போட்டி மற்றும் ஜுனியர் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி பங்கேற்கிறது. அப்படி இருக்கும் போது இத்தகையகிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இந்திய அரசு மறுப்பு தெரிவிப்பதன் காரணம் புரியவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் பாகிஸ்தானின்முன்னாள் வீரர் நதீம் அப்பாஸி.
இந்திய அணிக்கு அனுமதி மறுக்கும் இந்திய அரசின் முடிவு ஏமாற்றத்தை அளிக்கிறது. இருநாடுகளுக்கும் இடையே நிலவும் பிரச்சனையில் சிக்கித்தவிப்பது கிரிக்கெட் மட்டுமே என கவலையுடன் கூறுகிறார் பாகிஸ்தான் கிரிக்கெட் நடுவரான கோகாப் பட்.
கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன்களின் ஆட்டம் ஆகும். அதனை அரசியல் லாபத்திற்கான பகடைக்காயாக பயன்படுத்துகின்றன இரு நாடுகளும்.
அதற்குப் பதில் இரு நாட்டினரும் கிரிக்கெட் விளையாடுவதையே விட்டு விடலாம் என்கிறார் மாலிக் சாகிர் அலி என்ற பேராசிரியர். பாவம்அவருடைய வருத்தம் எல்லாம் இரு நாடுகளுக்கும் இடையேயான போட்டியை காண முடியவில்லையே என்பது தான்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications