ஏப்ரல் 3ல் இந்தியா வருகிறார் கிளின்டன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடவும் பூகம்ப நிவாரணத்துக்கு நிதி திரட்டவும் ஒருவாரகால சுற்றுப் பயணமாக, அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன் ஏப்ரல் மாதம் 3ம் தேதி இந்தியா வருகிறார்.

இந்தியா வரும் அவர் தொழிலதிபர்கள், சமுக சேவை அமைப்புத் தலைவர்கள் உள்பட பலரை சந்தித்துப் பேசுவார்.

கிளின்டனின் இந்திய வருகை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளதாவது:

அமெரிக்க அதிபராக இருந்த போது கடந்த வருடம் மார்ச் மாதம் தனது மகள் மற்றும் மாமியாருடன் இந்தியாவந்திருந்தார் கிளின்டன்.

ஏப்ரல் 3 ம் தேதி இரவு இந்தியா வரும் அவர் மறுநாள் காலை விமானம் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத்நகருக்குச் சென்று அங்கு பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவார்.

தற்போது இந்தியா வரும் கிளின்டன், ஏப்ரல் 4 ம் தேதி முழுவதும் அகமதாபாத்தில் இருப்பார். ஏப்ரல் 5ம் தேதிபூகம்பத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பூஜ் நகருக்குச் செல்வார். இரு நகரங்களிலும் மாநில அரசுஅதிகாரிகள் மற்றும் அரசு சாரா அமைப்புக்களின் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசுவார்.

அதே நாள் அவர் மும்பை செல்வார். அங்கு இரண்டு நாட்கள் தங்கும் கிளின்டன், அரசியல் தலைவர்கள் மற்றும்தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசுவார்.

ஏப்ரல் 7 ம் தேதி காலை கொல்கத்தா செல்லும் அவர் அங்கு அன்னை தெரசா அனாதை இல்லத்துக்குச் செல்வார்.மேலும் மேற்கு வங்க மாநில கவர்னரையும் சந்தித்துப் பேசுவார்.

அன்று மாலை டெல்லி வரும் கிளின்டனுக்கு பிரதமர் வாஜ்பாய் விருந்தளிக்கிறார்.

ஏப்ரல் 8 ம் தேதி கிளின்டன் உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரான்பூர் மாவட்டத்திலுள்ள ராம்பூருக்குச் செல்கிறார்.இது, கிளின்டனின் நண்பரும், அமெரிக்காவிலுள்ள ஒமாஹாவில் பெண்கள் பாலிடெக்னிக் நடத்துபவருமானவினோத் குப்தாவின் சொந்த ஊராகும்.

கிளின்டன் ஏப்ரல் 10 ம் தேதி லண்டன் புறப்பட்டுச் செல்கிறார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, குஜராத் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இதில் 25,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் உடைமைகளையும், உறவினர்களையும் இழந்தனர்.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அதிக அளவு நிதியளித்தனர்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்ட அமெரிக்காவில் கிளின்டன பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அதிபர் பதவிக்காலம் முடிந்து வெள்ளை மாளிகையிலிருந்து கிளம்பிச் செல்லுமுன் கிளின்டன், என் வாழ்க்கையில்இந்தியாவுக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தை ஒரு போதும் மறக்க முடியாது என்று கூறியிருந்ததுகுறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+