காங்கிரஸ் கட்சியில் தீராத கோஷ்டி பூசல்
மதுரை:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை நன்றாகத் தேடிப் பார்த்தால் தான் அது இருப்பதே தெரியும். தேய்ந்துபோய்விட்டஅந்தக் கட்சியில் உட்கட்சிப் பூசலுக்கு மட்டும் பஞ்சமேயில்லை.
தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், முன்னாள் தலைவர்கள் திண்டிவனம் ராமமூர்த்தி, தங்கபாலுஆகியோர் ஒன்றாக சேர்ந்து செயல்படுவது போல காட்டிக் கொள்கின்றனர். ஆனால், மாவட்ட அளவில்அவர்களது ஆதரவாளர்கள் இன்னும் ஒன்று சேரவில்லை.
மதுரையில் இளங்கோவனின் ஆதரவாளர் காந்தியும், தங்கபாலுவின் ஆதரவாளர் கணபதியும், யார் நகர காங்கிரஸ்தலைவர் என்பதில் மோதி வருகின்றனர்.
இதே போல் இளங்கோவன் ஆதரவாளர் தேவராஜுக்கும், தங்கபாலுவின் ஆதரவாளர் செல்வராஜ்பாண்டியனுக்குமிடையே மாவட்ட காங்கிரஸ் தலைவர் என்பது குறித்து பெரும் தகராறு ஏற்பட்டுள்ளது.
மதுரையில் சமீபத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில், ஆயுத பேர ஊழலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்கபாலு ஆதரவாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இளங்கோவன்ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணித்தனர். கோஷ்டி பூசல் அதிகரித்து வரும் மதுரையில் மத்தியதொகுதியைக் காங்கிரஸ் கேட்கிறது.
காங்கிரசுக்கு சீட் கொடுத்து அதில் ஒரு கோஷ்டியினருக்கு சீட் கிடைத்தால் அவரைத் தோற்கடிக்க வேறு அணிகள்தேவையில்லை. எதிர் கோஷ்டியே போதுமானது என்கிறார்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications