மதுரையில் வெடி குண்டுகளுடன் ஒருவர் கைது
மதுரை:
மதுரை அருகே பஸ்சிலிருந்து வெடி குண்டுகளுடன் வந்து இறங்கிய நபரை போலீசார்கைது செய்து வெடி பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மதுரை சேடப்பட்டி அருகே உள்ள மங்களரேவு பகுதியில் போலீசார்புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிந்தனர்.
அப்போது அங்கு வந்த நின்ற பேருந்திலிருந்து இறங்கிய வேலுச்சாமியின் (வயது 50)மீது சந்தேப்பட்டு அவரை சோதனையிட்டனர். அவரிடம் 20 ஜெலட்டின் குச்சிகள்,வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் 20 கருவிகள், 36 கிலோ வெடி மருந்துகளும்இருந்தன.
போலீசாரைக் கண்டவுடன் வேலுச்சாமியுடன் வந்த அவரது கூட்டாளிதப்பியோடிவிட்டார்.
வெடி பொருள்களைப் பறிமுதல் செய்த போலீசார் வேலுச்சாமியை மட்டும் கைதுசெய்தனர். தப்பியோடிய கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலுச்சாமி மீது இந்திய வெடிபொருட்கள் தடுப்புச் சட்டம் 3(1)பி பிரிவின் கீழ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications