லஸ்கார்- இ தொய்பா தீவிரவாத தலைவன் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், லஸ்கார் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் சலாவுதீன் புதன்கிழமைபோலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
சலாவுதீன் சுட்டுக் கொல்லப்பட்டதை போலீசார் தங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகவேகருதுகின்றனர்.
ஏனெனில் சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் நடந்த பல தாக்குதல் சம்பவங்கள் மற்றும் தற்கொலைப் படை தாக்குதல்சம்பவங்களில் மாஸ்டர் மைன்டாக செயல்பட்டவர் சலாவுதீன் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்காம் மாவட்டம் பஹ்ரூ என்ற இடத்தில் சிறப்பு அதிரடிப்படை வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையேபுதன்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்தச் சண்டையில் சலாவுதீன் உயிரிழந்தார்.
இவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், கடந்த இரண்டுவருடங்களாக ஜம்மு காஷ்மீரில் நடந்த பல தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு எங்களுக்கு மிகப்பெரியதலைவலியைக் கொடுத்தவர் சலாவுதீன்.
இந்த வருடத் தொடக்கத்தில் ரஜோரி மாவட்டம் மன்ஞ்சக்கோட்டே பகுதியில் போலீசார் சென்று கொண்டிருந்தவாகனத்தை தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்துத் தகர்த்ததில் 17 போலீசார் கொல்லப்பட்டனர்.
பல இடங்களில் தொடர்ந்து போலீசார் மீது தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்னணியில்இருந்து செயல்பட்டவர் சலாவுதீன்தான்.
தொடர்ந்து ஸ்ரீநகர் உள்பட பல இடங்களில் போலீசாரைக் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர்தீவிரவாதிகள். இருப்பினும் தீவிரவாதிகளின் தாக்குதலை சமாளிப்போம் என்று நாங்களும் பதில் தாக்குதல்நடத்தினோம் என்றனர்.
துணை ஐ.ஜி கே.ராஜேந்திரா கூறுகையில், லஸ்கார் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் மூத்த தலைவரானசலாவுதீன் எங்களை நோக்கித் தாக்கிகுதல் நடத்தியவுடன், நாங்களும் சுதாகரித்துக் கொண்டு அவரை நோக்கித்திருப்பித் தாக்குதல் நடத்தி அவரைக் கொன்றோம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications