எம்.ஜி.ஆர். சத்துணவு போட்டார், கருணாநிதி முட்டை போட்டார்.. நான் பிரியாணி போட்ரேன்...
ஈரோடு:
115 ஆடுகள், 2000 கிலோ கோழிக் கறியுடன் மெகா விருந்து வைத்து அசத்தி விட்டார் ஈரோடு மாவட்டம்கொடுமுடி அருகேயுள்ள கொல்லங்கோயில் டவுன் பஞ்சாயத்துத் தலைவர் பாலசுப்ரமணியம்.
கொல்லங்கோவில் டவுன் பஞ்சாயத்துத் தலைவர் பாலசுப்ரமணியம், சடையப்ப சாமி கோவில்ல கெடா வெட்டுவெச்சிருக்கேன். குடும்பத்தோட எல்லாரும் வந்து கலந்துக்கணும் என்று வீடு வீடாகப் போய் பத்திரிக்கை கொடுத்துஅழைத்தார்.
ஒரு பஞ்சாயத்துத் தலைவரே வந்து இப்படிக் கேட்டதால், விருந்துக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் கூடிவிட்டது.
விருந்து தினத்தன்று சடையப்ப சாமி கோவிலில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடினர். காத்திருந்த கூட்டம்சோர்வடையக் கூடாது என்பதற்காக ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இவ்வளவு பெரிய மெகா விருந்து நடத்தி 25,000 பேரை ஒரே இடத்தில் கூட்டி கலக்கி விட்டார் பாலசுப்ரமணியம்.
1996 ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது டவுன் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிட்டுவெற்றி பெற்றார். பின்னர் தி.மு.கவில் சேர்ந்தார். அப்போது சத்துணவு மையத்துக்கு தட்டுக்கள் வழங்கினார்.தட்டுக்கள் வழங்கியது குறித்து பெரிய அளவில் பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்தார். விளம்பரத்தில்எம்.ஜி.ஆர்.படம் இடம் பெற்றிருந்தது.
எம்.ஜி.ஆர்.படத்தை போட்டு விளம்பரம் செய்தவர் எப்படி தி.மு.க.வில் இருக்க முடியும்? தி.மு.கவிலிருந்து தூக்கிஎறியப்பட்டார்.
அப்போதே சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவது என வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட ஆரம்பித்தார்.
மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட எல்லா சத்துணவு மையங்களுக்கும் பல ஆயிரம் செலவு செய்து உதவி,எஸ்.எஸ்.எல்.சி., 12 ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவிகளுக்குப் பரிசுவழங்குதல் என்று மக்களைக் கவர ஆரம்பித்தார்.
இப்போது மிகப் பெரிய விருந்து நடத்தி முடித்திருக்கிறார். இது குறித்து பாலசுப்ரமணியம் கூறுகையில், விருந்துநடத்தியதில் உள்நோக்கம் எதுவும் கிடையாது. சடையப்பா சுவாமிக்கு ஏற்கனவே செய்திருக்க வேண்டியநன்றிக்கடன். இப்பத்தான் பொருளாதார வசதி கிடைத்தது. செய்து விட்டேன்.
சட்டசபைத் தேர்தலில் மொடக்குறிச்சி தேர்தலில் போட்டியிட உள்ளேன். காமராஜர் காலத்தில் இருந்த மதிய உணவுதிட்டத்தை எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டமாக மாற்றியது ஓட்டுக்காகத்தான்.
கருணாநிதியும், சத்துணவுடன் முட்டை கொடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ஓட்டுக்காகத்தான். நான்மட்டும் விருந்து வைத்தால் தப்பா?
எப்பவுமே எனக்குப் பொதுச்சேவை செய்வதில் அதிக விருப்பம் உண்டு. சட்டசபைத் தேர்தலில் நின்றால் எல்லாமக்களுக்கும் சேவை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த முறை கண்டிப்பா மொடக்குறிச்சி தொகுதியில் ஜெயிப்பேன். நான் சாமி கும்பிடற சடையப்பசாமி ஆசிஉண்டு. கண்டிப்பா எம்.எல்.ஏ.ஆவேன் என்றார் பாலசுப்ரமணியம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications