தி.மு.க. கூட்டணியிலிருந்து ஐ. ஜ.த. விலகல்
சென்னை:
தி.மு.க. கூட்டணியிலிருந்து திடீரென்று விலகிய ஐக்கிய ஜனதா தளம் கட்சி, இந்தத் தேர்தலில் தனித்துப்போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
தி.மு.க .கூட்டணியிலிருந்து விலகிய மூன்றாவது கட்சி இது.
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில், மத்திய விமானத்துறை அமைச்சராக உள்ள சரத்யாதவ் தலைமையிலான ஐக்கியஜனதா தளம் இடம் பெற்றிருந்தது.
சரத்யாதவின் ஐக்கிய ஜனதா தளம் திடீரென்று வியாழக்கிழமை அக்கட்சியிலிருந்து விலகுவதாகஅறிவித்ததுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ரகுபதி மற்றும் செயலாளர் ஜாவீத் ஆகியோர் நிருபர்களுக்குஅளித்த பேட்டி:
ஐக்கிய ஜனதா தளத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது. நடைபெற உள்ள சட்டசபைத்தேர்தலில், அந்தந்த மாநில நிர்வாகிகள் முடிவு செய்து யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைத்துப்போட்டியிடலாம் என்று அகில இந்திய ஐக்கிய ஜனதா தள தலைமை கருத்து தெரிவித்திருந்தது.
கூட்டத்தில் அகில இந்திய ஐக்கிய ஜனதா தள தலைமை தெரிவித்த கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஐக்கிய ஜனதா தள மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியம், கட்சித் தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில், தொகுதிப்பங்கீடு குறித்து தி.மு.க. தலைமை எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை. தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கஎங்களுக்கு அழைப்பு விடுக்கவும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்தும் கூட்டத்தில்விவாதிக்கப்பட்டது.
விவாதத்தின் முடிவில், தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகுவது என்றும், சட்டசபைத் தேர்தலில் தனித்துப்போட்டியிடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது என்றனர்.
ஏற்கனவே, வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான த.ரா.கா., காமாட்சி நாயுடு தலைமையிலான திராவிடர்தெலுங்கர் முன்னேற்றக் கழகம் ஆகியவை ஏற்கனவே திமுகவிலிருந்து விலகி விட்டது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications