ஏப்ரலில் ஜி.எஸ்.எல்.வி. மீண்டும் சோதனை?
சென்னை:
ஏப்ரல் மாத இறுதியில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மீண்டும் ஏவப்படுவம் எனத் தெரிகிறது.
இரு தினங்களுக்கு முன் இந்த ராக்கெட்டை ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
ராக்கெட்டின் 4 ஸ்ட்ராப் ஆன் மோட்டார்களில் ஒன்று சரியாக செயல்படாததும். அதில் ஏற்பட்ட தீயும் ராக்கெட்டை ஏவுவதைதோல்வியடையச் செய்தன.
இப்போது ராக்கெட்டில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து மிக நுணுக்கமாக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இப்போதுகிடைத்துள்ள தகவலின்படி இந்த மேட்டார்களில் ஒரு மோட்டாருக்கு எரிபொருளை செலுத்தும் இன்ஜெக்டர் சரியாகசெயல்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இந்த ராக்கெட்டை ஏவும் பணியில் ஈடுபட்டிருந்து சமீபத்தில் சென்னை திரும்பிய மூத்த விஞ்ஞானி ஒருவர் (பெயர் வெளியிடவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்) கூறுகையில், இது ஒரு சிறிய பிரச்சனை தான். இதை சில வாரங்களில் சரி செய்துவிடமுடியும். ராக்கெட்டை அடுத்த மாத இறுதியிலேயே திரும்ப செலுத்திவிட முடியும்.
இந்த இன்ஜெக்டர் சரியாக செயல்படாததால், டர்பைன்களுக்கு போதிய எரிபொருள் கிடைக்கவில்லை. இதனால், அந்தமோட்டார் உரிய உந்துவிசையை உற்பத்தி செய்யவில்லை. இதனால், ராக்கெட்டின் கம்ப்யூட்டர் எல்லா மோட்டர்களையும் ஷட்டெளன் செய்ய ஆணையிட்டுவிட்டது.
இதனால், ராக்கெட் தப்பியது என்றார் அந்த விஞ்ஞானி.
விஞ்ஞானிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்த இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் டாக்டர்கஸ்தூரிரங்கன் வெள்ளிக்கிழமை பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். இரு வாரங்களுக்குப் பின் தான் அவர் மீண்டும் ராக்கெட்தளமான ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வருவார்.












Click it and Unblock the Notifications