ஆயுத பேர ஊழலால் எங்களுக்கு பாதிப்பில்லை: பா.ஜ.க.
சென்னை:
ஆயுத பேர ஊழல் குறித்த செய்திகளால் 5 மாநில சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எவ்விதபாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அகில இந்திய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
சென்னை வந்த ஜனா.கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:
தெஹல்கா டாட் காம் இணையதளம் பா.ஜ.க.மேல் ஆயுதப் பேர ஊழல் புகார் கூறியுள்ளது. நாங்கள்குற்றமற்றவர்கள் என்பதை, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள இதர கட்சிகளின் ஆதரவுடன் மக்களுக்குநிரூபிப்போம்.
ஆயுதப் பேர ஊழலைக் காரணம் காட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி விட்டார் திரிணாமூல்காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குவரத் தயாராக இருந்தால், அக்கட்சியை ஏற்றுக் கொள்வோம்.
தேவைப்பட்டால் பா.ஜ.க. மேற்கு வங்கத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும்.
தெஹல்கா டாட் காம் இணையதளம் வெளிக்கொண்டு வந்த ஆயுதப் பேர ஊழலால் மத்திய அரசுக்கு நெருக்கடிஏற்படும் என்று மூன்றாவது அணி நினைத்தன. ஆனால் அவர்கள் நினைத்தது எதுவும் நடக்கவில்லை.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறினாலும் மத்திய அரசுக்கு எவ்விதபாதிப்பும் இல்லை.
பல ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றுதான்பெரும்பான்மையான சட்டநிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் அதிகாரிதான் முடிவு செய்யவேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது அனைவரும் அறிந்தது.
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியது சட்டசபைத்தேர்தலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள பாஜக வேட்பாளர்கள் பெயர், விவரம் கட்சியின் தேர்தல்குழு, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின் வெளியிடும் என்றார் ஜனா கிருஷ்ணமூர்த்தி.
பா.ஜ.க. தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின் முதன்முதலாக சென்னை வந்துள்ளார்ஜனா.கிருஷ்ணமூர்த்தி. அவருக்கு சென்னை விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
யு.என்.ஐ.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications