வாழப்பாடி, திருநாவுக்கரசுடன் சேர்ந்து புதிய அணி: வைகோ முடிவு
சென்னை:
தி.மு.க. கூட்டணியிலிருந்து ம.தி.மு.க. வெளி யேறுகிறது. வாழப்பாடி ராமமூர்த்தி, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட சிலகட்சிகளுடன் புதிய அணி அமைப்பது குறித்து மதிமுக தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.திருநாவுக்கரசுவின் எம்.ஜி.ஆர். அதிமுகவும் இக் கூட்டணியில் சேருகிறது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக நெருக்கடியான கட்டத்தில் உள்ளது. அக் கட்சிக்கு தொகுதிகள்ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்ட தையடுத்து கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறலாம் என்று கூறிவிட்டார்கருணாநிதி.
எனவே கூட்டணியில் மதிமுக இனி நீடிப்பதில் அர்த்தம் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
இச் சூழ்நிலையில், புதிதாக ஒரு அணி அமைத்து தேர்தலைச் சந்திக்க மதிமுக தயாராகிவிட்டது. இந்த அணியில்,திமுக அணியில் இடம் பெற்று சீட் கேட்டு ஏமாந்த சில கட்சிகள் மற்றும் பிற கட்சிகள் இடம் பெறலாம் என்றுதெரிகிறது.
அந்த வரிசையில், எம்.ஜி.ஆர். அதிமுக, வாழப்பாடியின் தமிழக ராஜீவ் காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி மற்றும் சிலகட்சிகளுடன் சேர்ந்து புதிய அணி அ மைக்க மதிமுக தரப்பில் திட்டம் தயாராகி உள்ளது.
இந்தக் கூட்டணியினர், தங்களுக்குக் கருணாநிதி இழைத்த துரோகம் குறித்து மக்களிடையே பிரசாரம் செய்யமுடிவெடுத்துள்ளன.
திமுக அணியினரின் தோல்விக்காக கடுமையாக உ ழைக்கவும் மதிமுக தரப்பு முடிவு செய்துள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வாழப்பாடியுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியிருப்பதாக மதிமுக தரப்பில்கூறப்படுகிறது.
மேலும், திருநாவுக்கரசுவும் இந்த அணியில் இ ணைய தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
தாயகத்தில் அமைதி:
இதற்கிடையே, கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கட் அண்ட்ரைட்டாக கூறி விட்டதால் மதிமுக தரப்பில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இத்தனை நாட்களாக கூட இருந்த தங்களுக்கு இந்தக் கதியா என்ற ஆதங்கம் தொண்டர்களிடம் காணப்படுகிறது.
நெருக்கடி நேரத்தில் கூட இருந்தவர்களுக்கு 3 இடங்கள் கொடுப்பதில் கருணாநிதி இத்தனை கெடுபிடிகாட்டியிருக்கத் தேவையில் லை என்று அவர்கள் கருதுகின்றனர்.
மதிமுக அலுவலகத்தில் பெரும் அ மைதி நிலவுகிறது. அங்கு கூடியிருக்கும் தொண்டர்கள் மத்தியில், அடுத்துவைகோ என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மீண்டும் ஒரு முறை வைகோவை, கருணாநிதி முதுகில் குத்தி விட்டார் என்று அவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.பேசாமல், முதலிலேயே டாக்டர் ராமதாஸுடன் சேர்ந்து அதிமுக கூட்டணிக்குப் போயிருக்கலாம் என்றும்தொண்டர்கள் பேசிக் கொள்கிறார்கள்.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
எடப்பாடி செய்த அந்த 3 தவறுகள்.. "முக்குலத்தோர் கோபம்.." உடைந்து சிதற போகுது கட்சி? அடுத்து என்ன -
குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications