பிரிட்டனை கண்டித்து போராட்டம்: பழ.நெடுமாறன் கைது
சென்னை:
பிரிட்டன் அரசு விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்ததை எதிர்த்து போராட்டம்நடத்தியதற்காக தமிழ் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் கைது செய்யப்பட்டார்.
லண்டனை தலைநகராக கொண்டு விடுதலை புலிகள் செயல்பட்டு வந்தனர். பிரிட்டன்அரசு தடை செய்ய வேண்டுமென இலங்கை அரசு பல ஆண்டுகாலமாக கோரிக்கைவிடுத்துவந்தனர்.
சென்ற மாதம் பிரிட்டன் அரசு விடுதலை புலிகள் இயக்கத்தை பிரிட்டனில் தடைசெய்வதாக அறிவித்தது.
இந்நிலையில் பிரிட்டன் அரசு விடுதலை புலிகள் இயக்கத்துக்கு தடை விதித்ததற்குஎதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், தமிழ் ஈழவிடுதலை ஆதரவு இயக்கங்களின் தொண்டர்களுடன் இணைந்து, வெள்ளிக்கிழமைகாலை சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரிட்டன் பொருட்களை தீயிட்டு கொளுத்தினர்.பின்னர் அவர்கள் ஊர்வலம் சென்ற முயன்றபோது போலீசார் நெடுமாறனையும்,அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட 1,000 பேரையும் கைது செய்தனர்.
அவர்கள் வட சென்னை, சிந்தாதிரிப்பேட்டை திருமண மண்டபத்தில்வைக்கப்பட்டுள்னர். இவர்கள் அனைவரும் வெள்ளக்கிழமை மாலை விடுதலைசெய்யப்படுவார்கள்.
பாண்டிச்சேரியில் போராட்டம்:
ஈழ மக்கள் ஆதரவாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 48 பேர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர்.
விடுதலை புலிகளுக்கு பிரிட்டன் அரசு தடை விதித்ததை எதிர்த்து இவர்கள்பாண்டிச்சேரி புதிய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட பொருட்களையும், துணிகளையும் எரிக்கமுயன்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மீனவர் போராட்டம்:
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைஎதிர்த்து 100 மீனவர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள்இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100 மீவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications