துப்பாக்கியை மணந்து கொண்ட ராணுவ பெண் கமாண்டோ
டெல்லி:
உறவினர்களால் கைவிடப்பட்டாலும் துணிச்சலுடன், தனித்து வாழ்ந்து சாதனை புரிந்துவருகிறார் பெண் ராணுவ கமாண்டோ.
ராணுவத்தில் இணைந்து தீவிரவாதிகளுக்கு எதிரான பணியில் ஈடுபட்டு வருவதால்உறவினரால் கைவிடப்பட்ட பெண்ணுக்கு இப்போது, சொத்தும், துணையுமாகஇருப்பது அவரது ஏகே-47 துப்பாக்கி மட்டும்தான்.
ஷகீலா பர்வீன் (வயது 30), ஜம்மூ- காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைஎடுக்கும் சிறப்பு அதிரடி குழுவில் (எஸ்.ஓ.ஜி.) இன்ஸ்பெக்டராக பணிபுரிந்துவருகிறார்.
ரஜோரி பகுதியில் பணிபுரியும் 3 பெண் கமாண்டோக்களில் இவர்தான் மூத்த அதிகாரிஎன்பது குறிப்பிடத்தக்கது.
ஷகீலா தனது உறவினர்களால் கைவிடப்பட்டவர். ராணுவத்தில் இணைந்துதீவிரவாதிகளுக்கு எதிரான பணியில் ஈடுபட்டதால் பர்வீன் அவரது உறவினர்களால்கைவிடப்பட்டார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில்,
என் உறவினர்கள் எனக்கும், அவர்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை எனபத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்து என்னை ஒதுக்கி விட்டனர். நான் எனதுஏகே-47 துப்பாக்கியையே மணந்து கொண்டுவிட்டேன்.
முன்பு நான் ஆசிரியை பணிக்காக விண்ணப்பித்து நேர்முகத் தேர்வுக்குசென்றிருந்தேன். நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்த அனைவரும் தங்களுக்கு அந்தவேலை கிடைக்க வேண்டும் என பிரார்த்தித்துக் கொண்டபோது, நான் மட்டும் எனக்குஅந்த வேலை கிடைக்கக்கூடாது என பிரார்த்தித்துக் கொண்டேன்.
என் பிரார்த்தனை பலித்தது. எனக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. அல்லா என்பிரார்த்தனையை நிறைவேற்றி வைத்தார்.
ராணுவத்தில் அதிக அளவில் ஆண்கள் பணி புரிந்தாலும் அவர்களுடன் பணிபுரிவதில்எனக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை. சில தினங்கள் 2 அல்லது 3 நாட்கள்தொடர்ந்து பணிகள் இருக்கும். அப்போது கூட ஆண்களுடன் பணிபுரிவதில் எனக்குஎந்த விதமான பிரச்சனையும் இருந்ததில்லை.
ராணுவ வீரர்கள் எனக்கு மிகுந்த மரியாதை அளிக்கிறார்கள். அவர்கள் செய்யும் பணிபாராட்டுக்குரியது. காஷ்மீர் போன்ற பிரச்சனைக்குரிய பகுதிகளில் பணிபுரிவதுகடினமானது. அங்கு அவர்கள் கடமையுணர்வுடன் பணியாற்றுவது பாராட்டுக்குரியது.
நான் ராணுவத்தில் சேர்வதற்கு காரணம், இந்தியாவின் முதல் பெண் காவலரும்,சூப்பர் காப் என அழைக்கப்படுபவருமான கிரன்பேடி தான்.
நான் அவரைப்பற்றி பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன். நான் அவரை நேரில் சந்தித்துநான் ராணுவத்தில் பணிபுரிவதற்கு அவர்தான் காரணம். அவரை முன்னுதாரணமாககொண்டுதான் நான் ராணுவத்தில் இணைந்தேன் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்என்றார் பர்வீன்.
பர்வீன் எஸ்.ஓ.ஜியில் இணைந்து 6 வருடமாகிறது. அவர் மிகுந்த நன்மதிப்பைபெற்றுள்ளார். அவர் இதுவரை 15 தீவிரவாதிகளை கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் அவர் அதை மறுக்கிறார்.
பர்வீன் தற்போது தனது விதவைத் தாயுடனும், தனது சகோதரர்களுடன் வாழ்ந்துவருகிறார். சகோதரர்களில் ஒருவர் ராணுவத்தில் பணி புரிகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications