பாக். ஆட்சியாளரின் ஆலோசகராக அணு விஞ்ஞானி நியமனம்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்பின் ஆலோசகராக பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான் நியமிக்கப்பட்டு உள்ளார்.
பாகிஸ்தான் அணுகுண்டு துறையின் தந்தை என அழைக்கப்படுபவர் அப்துல் காதிர் கான்.
கடந்த 99ம் ஆண்டு இந்தியாவிற்கு போட்டியாக பாகிஸ்தான் அணுகுண்டு வெடிக்க தேவையான அணுகுண்டுகளை தயாரித்து கொடுத்தவர் காதிர் கான்.
இந்தியாவில், மத்திய பிரதேச மாநிலத் தலைநகரான போபாலில் பிறந்த அப்துல் காதிர்கான் இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப்பபின் 1952ல்பாகிஸ்தான் சென்று குடியேறினார்.
1974ம் ஆண்டில் இந்தியா அணுகுண்டு சோதனை செய்த பின் பாகிஸ்தானும் அணுகுண்டு உருவாக்க முடிவு செய்தது.
ஹாலந்து நாட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த அப்துல் காதிர்கான் பாகிஸ்தான் திரும்பி கான் ரிசர்ச் லேபாரேட்டரிஸ் (கே.ஆர்.எல்) என்ற ஆராய்ச்சி அமைப்பைதுவக்கினார்.
1976ல் அப்போதைய பாக்.பிரதமர் ஜுல்பிகர் அலி புட்டோவின் உத்தரவின் பேரில் அணுகுண்டு தயாரித்த காதிர்கான் அதற்குத் தேவையான கதிரியக்கப்பொருள்களை ஐரோப்பாவில் இருந்த திருடி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
அதனால், இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு நிறைந்த பல்வேறு பங்களாக்களில் ஒன்றில் அவரை ரகசியமாக பாதுகாத்து வருகிறது பாகிஸ்தான்.
பாகிஸ்தானின் அணுகுண்டு தயாரிக்கும் திறன் பற்றி பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்த பாகிஸ்தான் கடைசியில் தன்னாலும் அணுகுண்டு தயாரிக்க முடியும்,தயாரித்து உள்ளோம் என்ற அறிவித்த பின்னர் தான் அப்துல் காதிர்கான் பொது மக்கள் பார்வையில் தென்பட்டார்.
இதற்கு காரணம் பாகிஸ்தான் அணுகுண்டு ரகசியங்களை திருடவில்லை. பல ஆண்டு காலம் முயற்சித்து அணுகுண்டு தயாரிக்கும் திறனை வளர்த்து கொண்டது எனஉலகிற்கு காட்டுவதற்காகத் தான்.
இத்தகைய முக்கிய புள்ளியான காதிர்கான், தனது கடைசி காலம் வரை கான் ரிசர்ச் லேப்பின் அணு ஆராய்ச்சியில் ஈடுபடுவதையே விரும்பினார்.
கடந்த காலங்களில் பெனாசிர் புட்டோ, நவாஸ் செரீப் போன்றோர் கூட கானை வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்து முடியாமல் தோற்றுப் போயினர்.
ஆனால, பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாாரப், கானை தற்போது தனது அறிவியல் ஆலோசகராக நியமித்து உள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications