இலங்கையில் 3 மாதம் சிறையிலிருந்த தமிழ் நிருபர் விடுதலை
கொகொழும்பு:
இலங்கை அரசால் 3 மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட தமிழ் பத்திரிக்கையாளர்விடுவிக்கப்பட்டதாக இலங்கை நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசின் தீவிரவாத எதிர்ப்பு சட்டம், விடுதலை புலிகளுடன் தொடர்புஇருப்பதாக சந்தேகப்படுபவர்களை எந்த விசாரணையும் இன்றி கைது செய்துஎத்தனை நாட்கள் வேண்டுமானாலும் சிறையில் வைக்க அனுமதிக்கிறது.
இந்த சட்டத்தின்படி லேக் ஹவுஸ் என்ற பத்திரிக்கையின் தமிழ் நிருபர் திருச்செல்வம்கைது செய்யப்பட்டார். இவர் விடுதலை புலிகள் தனி நாடு கேட்டு போராட்டம் நடத்திவரும் வடகிழக்கு பகுதியில் நிருபராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு விடுதலை புலிகளுடன் தொடர்பு இருக்கிறது என்று கூறி கடந்த ஜனவரி 2ம்தேதி கைது செய்யப்பட்டார்.
தற்போது 3 மாதம் கழித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து திருச்செல்லவத்தின் குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,இவர் மீது எந்த விதமான குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் கொழும்புமாஜிஸ்திரேட் நீதிமன்றம் இவரை விடுதலை செய்தது என்றனர்.












Click it and Unblock the Notifications