குருடர்கள் போல் நடித்து கொள்ளையடித்த திருடர்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை:

கண் தெரியாதவர் போல நடித்து, பணக் கட்டுக்களை கொள்ளையடித்துச் சென்றஇருவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் எஸ். பி அண்ணாமலை (35), இவர் ஒருதொழிலதிபர்.

தடாகம் ரோட்டில் கேஸ் ஏஜென்சி நடத்தி வரும் இவரது கடைக்கு இருவர் வந்தனர்.இவர்கள் வாய் பேச முடியாது எனவும், கண்பார்வையற்றவர்கள் என்ற அட்டையைஏந்தி வந்துள்ளனர். அண்ணாமலை அவர்களுக்கு இரக்கப்பட்டு காசு கொடுத்தார்.

அப்போது அண்ணாமலை 100 ரூபாய் கட்டு ஒன்றையும், 50 ரூபாய் ஒன்றையும்மேஜை மீது எடுத்து வைத்து எண்ணத் தொடங்கினார்.

அந்த சமயம் பார்த்து இருவரும் அந்தப் பணக்கட்டுக்களை பிடுங்கிக் கொண்டு ஓட்டம்பிடித்தனர். இதனைக் கண்ட அண்ணாமலை அதிர்ச்சியடைந்தார். மேலும்,இருவரையும் விரட்டிச் சென்றபோதிலும், அவர்கள் சாதுர்யமாகத் தப்பி ஓடி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்துவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+