மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நாராயணன்
டெல்லி:
உடல்நிலை தேறியதால் குடியரசுத்தலைவர் கே.ஆர். நாராயணன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
பித்தப்பையில் உருவான கற்களை அகற்றுவதற்காக புதன்கிழமை மாலை டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்நாராயணன்.
அவருக்கு வியாழக்கிழமை அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவைசிகிச்சைக்குப்பின் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால்சனிக்கிழமை பிற்பகல் குடியரசுத்தலைவர் மாளிகை திரும்பினார்.
டாக்டர்கள் ஆலோசனையின் படி மருத்துவமனையில் யாரையும் சந்திக்காத நாராயணன் குடியரசுத்தலைவர் மாளிகையிலும் பார்வையாளர்களை சந்திக்கமாட்டார் என குடியரசுத்தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமர் மற்றும் குடியரசு துணைத்தலைவர் உள்ளிட்ட தவைர்கள் நாராயணன் விரைவில் குணமடைய வாழ்த்து அனுப்பியிருந்தனர். குடியரசுத்தலைவர் விரைவில்குணமடைந்து தனது பணிகளை தொடர வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி.
குடியரசுத்தலைவருக்கு பித்தப்பையில் கல் உருவாகியுள்ளது என கேட்டதும் எனது நெஞ்சு கனத்தது. தற்போது அவர் குணமடைந்த செய்தி கேட்டபின்தான்மனதிற்கு அமைதி கிடைத்தது என குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய செய்தியில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications