வேட்பாளர் மட்டும் தேர்தல் செலவு செய்யலாம்: செழியன்
கோவை:
தேர்தலில் வேட்பாளரைத் தவிர மற்றவர்கள் செலவு செய்யாத வகையில் சட்டம் இயற்ற வேண்டும் எனஆசைப்படுகிறார் பழுத்த அரசியல்வாதியான இரா. செழியன்.
கோவையில் மக்கள் உரிமைக் கழகம் நடத்திய கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட இரா. செழியன்பேசியதாவது:
தேர்தல் செலவு என்பது தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் முடியும் நாள் வரை வேட்பாளர் செய்யும்செலவு தொகை தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தேர்தல் அறிவிக்கப்படும் நாளுக்கு முந்தைய நாள் வரை வேட்பாளரது செலவு கணக்கில் வைத்துக்கொள்ளப்படுவதில்லை.
தேர்தலில் வேட்பாளர் செலவு செய்வதைத் தவிர மற்றவர்கள் செலவு செய்யும் தொகை கணக்கில் வைத்துக்கொள்ளப்படுவதில்லை. எனவே, மற்றவர்கள் செலவு செய்வதை தவிர்க்குமாறு சட்டத்தை திருத்தி அமைக்கவேண்டும்.
கடந்த 1970 ம் ஆண்டு ஒருவேட்பாளருக்கு ஆதரவாக இந்திரா காந்தி பிரச்சாரம் செய்ய வந்தார். அப்போதுஅவரது பிரச்சாரப் பயணம், கட்சிப் பணத்தில் செலவு செய்யப்பட்டது எனக் கூறப்பட்டது.
இதை எதிர்த்து கன்வர் குப்தா என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்திராகாந்தி வேட்பாளரின் பெயரைச் சொல்லி பிரச்சாரம் செய்ததால் அந்தக் கணக்கு வேட்பாளரின் கணக்கில் தான்சேரும் எனத் தீர்ப்புக் கூறியது.
ஆனால், அடுத்த சில மாதங்களில் காங்கிரஸ், கட்சி சார்பாக செய்யப்படும் பிரச்சாரத்திற்கு வேட்பாளர்பொறுப்பல்ல என சட்டம் கொண்டு வந்தனர். கட்சி செலவு வேட்பாளார் செலவு ஆகாது என்பது இன்று வரைகடைபிடிக்கப்படுகிறது.
ஒரு தொகுதியில் 10 லட்சம் வாக்காளர்கள் இருந்தாலும், 5 லட்சம் வாக்காளர்கள் இருந்தாலும் ஒரே செலவுதொகைதான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த செலவு தொகையை மக்கள் தொகைக்கு ஏற்ப நிர்ணயிக்க வேண்டும்.
கடந்த காலத் தேர்தல் முறைகள் குறித்து கல்வெட்டுக்கள் உள்ளன. சோழர்காலத்தில் நடந்த தேர்தலில் 3முறைக்கும் மேல் ஒருவர் பதவி வகிக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
தவறு செய்பவர் மட்டுமின்றி, அவரது உறவினர்களும் தேர்வு செய்யப்படக் கூடாது என கூறப்பட்டுள்ளது. அதேசமயம், தற்போது அமெரிக்காவில் கூட, 8 ஆண்டுகளுக்கு மேல் அதிபர் பதவியில் ஒருவர் நீடிக்க முடியாது.இத்தகைய சூழ்நிலையில், நமது நாட்டிலும் இத்தகைய சட்டம் தேவையானது தான்.
ஒருவர் நீண்ட நாட்களுக்குப் பதவியில் இருந்தால் ஊழல் செய்வார் என்ற அர்த்தம் இல்லை. 20 ஆண்டுகள்பதவியிலிருந்தவர்கள் ஒன்றும் சம்பாதிக்காமல் இருந்ததும் உண்டு. பதவிக்கு வந்த 6 மாதத்தில் சம்பாதித்துக்கொண்டவர்களும் உண்டு.
தேசிய அளவிலான கட்சிகள் மாநிலத்திற்கு எதுவும் செய்யாதபோது மாநில அளவிலான கட்சிகள் உருவானது.ஆனால், இப்போது மாநில கட்சிகளே சரியாக செயல்படவில்லை என்ற அடிப்படையில் சாதி அடிப்படையிலானவட்டாரக் கட்சிகள் தோன்றியுள்ளது என்றார் இரா. செழியன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications