பிரசாரத்தை திருச்சியில் துவக்குகிறது பா.ஜ.க.
சென்னை:
பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரம் திங்கள்கிழமை திருச்சியில் தொடங்குகிறது.
கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான எல்.கே.அத்வானி பிரசாரத்தைத் துவக்கிவைக்கிறார்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வுக்கு 21 தொகுதிகளும், திருச்சி எம்.பி. தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது வேட்பாளர் தேர்வில் பா.ஜ.க. மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், தனது தேர்தல் பிரசாரத்தை திங்கள்கிழமை துவக்குகிறது பா.ஜ.க. திருச்சியிலுள்ள கொட்டப்பட்டுமைதானத்தில் நடக்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் அத்வானி கலந்து கொண்டு பேசுகிறார். இதில் அகில இந்தியபாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிற கட்சிகளும் இதில் கலந்து கொள்கின்றன. தி.மு.க.கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள ம.தி.மு.க. சார்பிலும் அதன் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கூட்டத்தையொட்டி திருச்சியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் யாரும் அசம்பாவிதச்செயல்களில் ஈடுபட்டு விடாமல் தடுப்பதற்காக கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications