அமெரிக்கா: வேலையிழக்கும் இந்திய சாப்ட்வேர் நிபுணர்கள்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:

அமெரிக்க தொழில்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் பலர் வேலையிழந்து வருகின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது சாப்ட்வேர் துறை.

உண்மையில் அமெரிக்காவில் பல்வேறு துறைகளிலும் ஆட்குறைப்பு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் அமெரிக்க நிறுவனங்கள் செலவைகுறைப்பதற்காக எடுத்து வரும் முயற்சிகளே.

ஆனால், சாப்ட்வேர் துறையில் ஏற்படும் ஆட்குறைப்பு பெரிதுபடுத்தப்படுவதற்கு காரணம் மற்ற துறைகளை நம்பி கம்ப்யூட்டர் துறை உள்ளது. இதனால்,மற்ற துறைகளில் ஏற்பட்டுள்ள சரிவு கம்ப்யூட்டர் துறையை நேரடியாகத் தாக்கி வருகிறது.

இதனால் வேலையிழப்பவர்களில் அதிகம் பேர் சாப்ட்வேர் துறையைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அதிலும் கொடுமை அமெரிக்காவில் சாப்ட்வேர்துறையில் ஈடுபட்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள்.

அதனால், இந்த ஆட்குறைப்பினால், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலையிழந்து தாயகம் திரும்பி வருகின்றனர். ஆனால், இந்த நிலை விரைவில்மாறும் எனக் கருதப்படுகிறது.

வரும் ஜூன் அல்லது ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அமெரிக்க பொருளாதாரம் ஸ்திரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வழக்கம்போல்எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் இருக்கும். சாப்ட்வேர் துறையும் பழைய இடத்தைப் பிடிக்கும் என பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கைதெரிவிக்கின்றனர்.

வேலை இழப்பை எதிர்கொள்வது எப்படி?:

வேலை இழப்பினால் சோர்ந்து விடாமல் மேற்கொண்டு முயற்சி செய்வது குறித்து கேரியர் இந்தியா டாட் காம் வெப் தளத்தில் ஒரு கட்டுரை கடந்த சிலமாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

வேலையில் இருந்து நீக்கப்படுவது என்பது உடனடியாக நடக்கக்கூடிய ஒரு சம்பவம் அல்ல. வேலையில் மட்டும் கவனம் செலுத்தாமல் நாம் வேலைசெய்யும் நிறுவனத்தின் நிலை அங்கு நாம் செயல்படும் விதம் பற்றி அறிந்து இருப்பது நல்லது.

நமக்கு அந் நிறுவனத்தில் மேற்கொண்டு பணிபுரியும் வாய்ப்பு குறைவு என கருதினால் உடனடியாக வேலையை விட்டு விட வேண்டும். வேலையைவிடுவதற்கோ, அல்ல்து நீக்கப்படுவதற்கோ நாம் மட்டுமே காரணமாக இருக்க முடியாது.

நிர்வாகத்தினர் வேலை நீக்கம் செய்வதற்கு முன் நாம் செயல்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உடனடியாக சிந்தித்து முடிவு செய்ய வேண்டும். வேலையைவிட்ட பின் அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

ஆனால் அதனை பற்றியே சிந்திக்காமல், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உதவியோடு நம்முடைய திறமைகளை அறிந்து அதற்கேற்ற வேலைக்குமுயற்சிக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+