ஜெ.வின் ஒப்புதல் வாக்குமூலம்
சென்னை:
டான்சி வழக்கில் அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்குமாறு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ள மனு மூலம், தன்னால் தேர்தலில் நிற்க முடியாது என்பதை மறைமுகமாக அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா ஒத்துக் கொண்டுள்ளார்.
டான்சி நில வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றத்தில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் அப்பீல் செய்துள்ளார். இதையடுத்து தண்டனைக்குஇடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது சட்டசபைத் தேர்தல் வரவுள்ளதால், ஜெயலலிதாவால் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்துசர்ச்சை எழுந்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனைபெற்றவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாது.
எனவே ஜெயலலிதாவால் தேர்தலில் போட்டியிட முடியாது என்று எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன.
எதிர்க்கட்சிகளின் பிரசாரம் பொய்யானது, ஜெயலலிதா குறித்து தவறான கருத்தை மக்கள் மத்தியில் பரப்பவேஇந்த பிரசாரம் என்று அதிமுக தரப்பில் எதிர் கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன.
மாறுபட்ட இந்தக் கருத்துக்களால் மக்கள் மத்தியில் ஜெயலலிதாவால் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பதுகுறித்து குழப்பம் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், தான் தேர்தலில் நிற்க டான்சி வழக்கின் தீர்ப்பு தடையாகஇருப்பதாகவும், எனவே அதை தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறும் கோரி ஜெயலலிதா, சென்னை உயர்நீதிமன்றத்தில்மனு செய்துள்ளார்.
ஜெயலலிதாவின் இந்த திடீர் மனு, ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலையைவெட்டவெளிச்சமாக்கியுள்ளது. டான்சி தீர்ப்பு தனது தேர்தல் போட்டிக்கு ஒரு தடை என்பதை ஜெயலலிதாவேஒப்புக் கொண்டுள்ளார்.
தேர்தல் கமிஷன் விதிப்படி, தீர்ப்பில் கூறப்பட்டுள்ள தண்டனைக்கு இடைக்காலத் தடை பெற்றிருந்தால் மட்டும்போதாது. தீர்ப்புக்கும் தடை பெற்றால் மட்டுமே தேர்தலில் போட்டியிட தடை நீங்கும்.
இல்லாவிட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்த நிலையில்தான், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், டான்சிதீர்ப்பை தடை செய்யக் கோரி கோர்ட்டை நாடியுள்ளார் ஜெயலலிதா.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications