ஏப்.6 ல் தொகுதி பட்டியல் வெளியிடுகிறது அதிமுக
சென்னை:
அதிமுக கூட்டணியின் தொகுதிப் பட்டியலை வரும் 6 ம் தேதி வெளியிட ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தொகுதிகளை அடையாளம் காணும் விஷயத்தில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
அதிமுக கூட்டணியில் காங்கிரஸ், தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 47 தொகுதிகளைத் தேர்வு செய்து கொள்ளும்வகையில் 70 தொகுதிகள் கொண்ட பட்டியலை மூப்பனாருக்கு அனுப்பி வைத்தார் ஜெயலலிதா.
ஆனால் இந்தத் தொகுதிகளில் தமாகா போட்டியிட விரும்பும் தொகுதிகளிலேயே காங்கிரசும் போட்டியிடவிரும்புகிறது.
இதே போல் இந்தப் பட்டியலில் உள்ள சில தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக பாமகவும் கூறி வருகிறது.
இதனால் தொகுதிகளை அடையாளம் காண்பதில் அதிமுக கூட்டணியில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் மூப்பனாரை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்தார் ஜெயலலிதா.அப்போது வரும் ஏப்ரல் 6 ம் தேதி நல்லநாளாக இருப்பதால் தொகுதிப் பட்டியலை வெளியிட வேண்டும் என்றுமூப்பனாரிடம் உறுதிபட கூறினார்.
இதனால், ஜெயலலிதா கொடுத்த 70 தொகுதிகளில் தமாகாவும், காங்கிரசும் போட்டியிடுவதற்காக 47 தொகுதிகளைஅடையாளம் கண்டு அந்தப் பட்டியலை மீண்டும் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ளார் மூப்பனார். அதில்கட்டாயமாக தரப்பட வேண்டிய தொகுதிகள், முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய தொகுதிகள் என்றுகுறிப்பிட்டுள்ளார் மூப்பனார்.
இருப்பினும், அதிமுக போட்டியிட விரும்பும் தொகுதிகளில் போட்டியிட தமாகா, பாமக, காங்கிரஸ் கட்சிகள்போட்டியிட விரும்புவதால் தொகுதிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இருந்தாலும் வரும் வெள்ளிக்கிழமை தொகுதிப் பட்டியலை வெளியிடுவோம் என்று ஜெயலலிதா கூறியிருப்பதாகஅதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications