பூகம்பம் பாதித்த பகுதியில் கிளின்டன்
டெல்லி:
செவ்வாய்க்கிழமை இரவு இந்தியா வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், புதன்கிழமை புஜ் நகர் புறப்பட்டு சென்றார்.
குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டதை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை ஒன்று திரட்டி அமெரிக்க இந்திய பவுண்டேசன் என்ற அமைப்புதுவக்கப்பட்டது.
அந்த அமைப்பின் சார்பில் அமெரிக்காவில் பூகம்ப நிவாரண நிதி திரட்டிய கிளின்டன் தற்போது 5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.செவ்வாய்க்கிழமை இரவு டெல்லி வந்த கிளின்டனை இந்திய வெளியுறவுத்துறிையின் கூடுதல் செயலாளர் சர்மா இந்திய அரசின் சார்பில் வரவேற்றார்.
அவருடன் அமெரிக்க இந்திய பவுண்டேசன் அமைப்பின் பல்வேறு பிரதிநிதிகள் வந்துள்ளனர். புதன்கிழமை முழுவதும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட புஜ் நகர்,ரத்லான் மற்றும் அஞ்சார் கிராமங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்.
புஜ் நகரில் உள்ள ஜுபிலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார்.
புதன்கிழமை மாலை அஹமதாபாத் செல்லும் கிளின்டன் குஜராத் முதல்வர் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்துபேசுகிறார்.
மகாத்மா காந்தி அமைத்த சபர்மதி ஆசிரமத்திற்கு செல்லும் கிளிண்டன் வியாழக்கிழமை மாலை மும்பை செல்கிறார்.
இயற்கை சீற்றங்களை சமாளிப்பதற்கான குழுவின் துணைத் தலைவரான சரத்பவாரை சந்தித்து பூகம்ப நிவாரண நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கிறார்.பின்னர் இந்திய தொழிலதிபர்களை மும்பையில் சந்தித்த பின் வெள்ளிக்கிழமை கொல்கத்தா செல்கிறார்.
சனிக்கிழமை அன்னை தெரசாவின் நினைவிடத்திற்கு செல்லும் கிளின்டன், குழந்தைகளுக்காக அன்னை தெரசா உருவாக்கிய ஆசிரமத்திற்கும்செல்கிறார். அன்று மாலை டெல்லி திரும்பி பிரதமர் வாஜ்பாய் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கான பாலிடெக்னிக் ஒன்றை பார்வையிடுகிறார். அமெரிக்காவில் வாழும் இந்தியர் ஒருவர்துவக்கியுள்ள இந்த பாலிடெக்னிக் ராம்பூர் கிராமத்தில் உள்ளது.
பின்னர் ஜெய்ப்பூர் சென்றும் தங்கும் கிளிண்டன், திங்கள்கிழமை டெல்லி திரும்புகிறார். அன்று மாலை இந்திய பயணத்தை முடித்து கொண்டு லண்டன் புறப்பட்டுசெல்கிறார்.
ஐ.ஏ.என்.எஸ்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications