3 வது அணியுடன் இணையுமா த.ரா.கா.?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வரும் ஏப்ரல் 9 ம் தேதி தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு உறுப்பினர்கள் கூடி சட்டசபைத் தேர்தலில்தங்களின் நிலை என்ன என்பது குறித்து விவாதிப்பார்கள் என்று அக்கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திபுதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக ராஜீவ் காங்கிரஸ் தமிழகத்தில் வரும்சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும். அல்லது 3 வது அணியுடன் இணைந்து போட்டியிடும்.
இதுகுறித்து ஏப்ரல் 9 ம் தேதி விவாதித்து முடிவெடுப்போம் என்றார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சமீபத்தில் பிரிந்தது தான் தமிழகராஜீவ் காங்கிரஸ் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications