இலங்கையில் விரைவில் அமைதிப்பேச்சுவார்த்தை தொடங்கும்?
கொழும்பு:
இலங்கையில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் அமைதிப்பேச்சுவார்த்தை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும், அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் தேதியை இலங்கைவெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் விரைவில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கூறியதாவது:
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் சண்டை நிறுத்தம் அறிவித்துள்ளோம் என்று கூறுகிறார்கள்விடுதலைப்புலிகள்.
மேலும் புலிகள் கட்டுப்பாட்டில் வாழும் தமிழர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கஇலங்கை அரசு உதவும். புத்தாண்டு மற்றும் புனிதவெள்ளியை முன்னிட்டு இரண்டு நாட்கள் சண்டை நிறுத்தம்செய்யவுள்ளது இலங்கை அரசு.
இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம்.அதுகுறித்து விரைவில் தெரிவிக்கப்படும்.
புலிகள், தங்களிடம் ஆயுதங்கள் இல்லாத காரணத்தாலும், தாங்கள் பலமிழந்துள்ள நிலையிலும் தான் சண்டைநிறுத்தம் அறிவிப்பார்கள். கடந்த காலங்களில் இதே போல் நடந்துள்ளன.
இலங்கையில் தனி ஈழம் கேட்டு 1983 ம் ஆண்டு முதல் புலிகள் சண்டையிட்டு வருகிறார்கள். புலிகளுக்கும்,ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்து வரும் சண்டையில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்என்பது அனைவரும் அறிந்ததே.
உயிர்ப்பலிகளைத் தடுத்து நிறுத்தும் வகையிலும், இனப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும்பேச்சுவார்த்தை நடத்த அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
ஆனால் அதற்கு முன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இடம், நேரம், பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் முக்கியநபர்கள் ஆகியவை குறித்து நாங்கள் முடிவு செய்ய வேண்டும்.
வன்னி பகுதியில் வாழும் தமிழர்களுக்கு உதவி செய்யும் வகையில் அவர்களுக்கு உணவுப்பொருட்கள் மற்றும்அத்தியாவசியப் பொருட்களை அனுப்பத் தீர்மானித்துள்ளோம்.
இந்த மாத இறுதிக்குள் எப்போது பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் என்பது குறித்து அறிவிப்போம் என்றார்.
கடந்த சில மாதங்களாக இரு தரப்பினரும் அமைதிப் பேச்சுவார்த்தை ஏற்படுத்த பல விதங்களில் முயற்சிகள்மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications