கோவை சிறையில் சிறை வார்டன்கள் ஏற்படுத்திய பரபரப்பு
கோவை:
கோவை மத்திய சிறையில் சிறை வார்டன்கள் ஒட்டிய நோட்டீசால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநோட்டீசுகளை அதிகாரிகள் அவசர அவசரமாக அகற்றியதோடு, ஒட்டியவர்கள் குறித்து விசாரணை நடத்தவும்போலீஸ் கமிஷனரிடம் புகார் கூறப்பட்டுள்ளது.
கோவை மத்திய சிறையில் சிறை வார்டன்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டு, பெரும்பிரச்னையாக உருவாகி வருகிறது. கடந்த 98ம் ஆண்டு சிறை வார்டன்களாகப் பொறுப்பேற்ற 60க்கும் மேற்பட்டவார்டன்கள் சிறையில் பணியாற்றி வருகின்றனர்.
கோவை சிறையில் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா உட்பட167 பேர் சிறையில் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாகவும், தேவையான உதவிகளை செய்துகொடுத்து வருவதாகவும் சிறை வார்டன்கள் புகார் எழுப்பினர்.
மேலும், கேரள ஜனநாயக மக்கள் கட்சித் தலைவர் அப்துல் நாசர், பாட்ஷா ஆகியோருக்கு செல்போன்கள்வழங்கியுள்ளதாகவும், இதில் தினம் வெளியில் தொடர்பு கொண்டு அவர்கள் பேசி வருவதாகவும் அவர்கள்தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையில் கட்டுக் கட்டாகப் பணம் கைமாறியிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் கடிதம் எழுதியுள்ளனர். இந்த சூழ்நிலையில், சிறைவார்டன்கள் தங்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகக் கூறி, அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த கைதிகள்அனைவரும் கடந்த திங்கள் கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
தற்போது இதைத் தொடர்ந்து சிறையில் உள்ள இளம் வார்டன்கள் அதிகாரிகளை எதிர்த்து போர்க் கொடிதூக்கியுள்ளனர். மேலும் துண்டு பிரசுரங்களையும், நோட்டீசுகளையும் சிறைச் சுவர்களில் ஒட்டியுள்ளனர். இந்தநோட்டீசுகளில் தமிழகத்தில் இன்னும் ஒரு பூகம்பம் ஏற்பட வேண்டுமா? எனத் தொடங்கி, தீவிரவாதிகளின்பணபலத்தில் அதிகாரிகள் மயங்கி விட்டனர்.
சிறையின் கருவறையில் உருவாகி வரும் இன்னும் ஒரு சதித்திட்டத்திற்கு அதிகாரிகள் ( சிறை எஸ்.பி.,டி.ஐ.ஜி)உடந்தையாகியுள்ளனர் என்பது உள்பட பல்வேறு வாசங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. இப்படிக்கு, அக்னிசோதனைக்குத் தயாராகும் காவலர்கள் எனக் கூறியுள்ளனர்.
இந்த நோட்டீசைப் பார்த்த சிறை உயர் அதிகாரிகள் அதனை உடனடியாக கிழிக்க உத்தரவிட்டனர். மேலும், இந்தநோட்டீஸ் ஒட்டியது குறித்து போலீஸ் கமிஷனரிடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்து போலீஸ் கமிஷனர்புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு புகாரை அனுப்பியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications