கொடுத்தவனே எடுத்துக் கொண்டான்டி... த.மா.கவின் சோகம்
சென்னை:
கடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற இடங்களில் 21 தொகுதிகளை அதிமுக எடுத்துக்கொண்டுள்ளது.
திருச்சியில் மக்களவைத் தொகுதியிலும் அதிமுகவே போட்டியிடுகிறது.
அதிமுக கூட்டணியில் 143 இடங்களில் எந்தெந்த கட்சி போட்டியிடும் என்ற முதல் பட்டியலை அக் கட்சியின்பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னையில் வெளியிட்டார். இந்தப் பட்டியலில் உள்ள 141 இடங்களில்அதிமுக போட்டியிடுகிறது.
மீதமுள்ள இரு தொகுதிளில் ஒன்று பார்வர்ட் பிளாக் (உசிலம்பட்டி தொகுதி) கட்சிக்கும் இன்னொரு இடம் ஜான்பாண்டியனின் தலித் கட்சியான தமிழக முன்னேற்றக் கழகத்துக்கும் (எழும்பூர் தொகுதி) ஒதுக்கியுள்ளார்ஜெயலலிதா.
இக் கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகளான தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சிகளுக்குஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் அடுத்த பட்டியலில் வெளியாகும்.
முதல் பட்டியலில் தனது கட்சி போட்டியிட உள்ள தொகுதிகளை மட்டுமே அறிவித்துள்ளார் ஜெயலலிதா.கூட்டணியில் பல கட்சிகளுக்கும் அள்ளி வழங்கிவிட்டதால் வெறும் 141 தொகுதிகள் மட்டுமே ஜெயலலிதாவுக்குக்கிடைத்திருக்கிறது.
இந்த 141 தொகுதிகளுமே அதிமுக வெற்றி பெறும் தொகுதிகளாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாகஇருக்கும் ஜெயலலிதா, முதலில் தனக்கு வேண்டியதை பொறுக்கி எடுத்துக் கொண்டுள்ளார். இதனால் தான்த.மா.கா. கடந்த தேர்தலில் வென்ற 21 இடங்களைக் கூட ஜெயலலிதா தனது கட்சிக்காக எடுத்துக் கொண்டுள்ளார்.
வட மாவட்டங்களில் பலமுடன் இருக்கும் பா.ம.கவுக்கு இந்தப் பகுதிகளில் அதிக இடங்களைத் தந்துவிடுவார்ஜெயலலிதா.
ஆனால், அதிமுக-பா.ம.கவுக்கு பலம் இல்லாத தொகுதிகளை ஜெயலலிதா தமிழ் மாநில காங்கிரஸ்- காங்கிரஸ்தலையில் கட்டிவிடுவார் என்று தெரிகிறது. இவர்கள் திமுக பலத்துடன் இருக்கும் இடங்களில் மோதும் நிலைக்குத்தள்ளப்பட உள்ளனர்.
இதனால், மிகவும் கலங்கிக் போய் இருக்கிறது த.மா.கா.-காங்கிரஸ் துணைக் கூட்டணி.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications