தேர்தலில் பயங்கர ஜாதிக் கலவர அபாயம்: உளவுத்துறை எச்சரிக்கை
சென்னை:
நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் பெரும் அளவில் வன்முறை நடக்க வாய்ப்பிருப்பதாக உளவுப் பிரிவினர்எச்சரித்துள்ளனர்.
அதிமுக அணியில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் திமுக அணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள்கட்சிக்கும் இடையே பெரும் அளவில் சாதிச் சண்டை ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.இந்தச் சண்டை வட மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதே போல தேர்தலில் திமுக, அதிமுக இடையே ஓட்டு வித்தியாசமும் குறைவான அளவிலேயே இருக்கும் என்றநிலையும் உள்ளது. இதனால், வாக்குகளை எப்படியாவது கைப்பற்றுவதில் இந்த இரு மிக பலம் வாய்ந்தகட்சிகளின் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளது உளவுத்துறை.
ஓட்டுப் பதிவு எந்திரங்கள் மூலம் மட்டுமே ஓட்டு போட முடியும் என்பதால், இந்த முறை கள்ள ஓட்டுபோட புதியடெக்னிக்களை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் பல கட்சிகளின் தொண்டர்களும் ஈடுபட்டுள்ளன. இதை அவர்களில்செயலில் காட்டும்போது இருவருக்கும் இடையே பிரச்சனை வெடிக்கலாம்.
தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரத்தை ஏற்படுத்தினால் அரசியல் லாபம் கிடைக்கலாம் என்பதால் சில கட்சிகள்ஜாதிப் பிரச்சனையை தூண்டிவிடவும் வாய்ப்புள்ளது என்கிறது உளவுத்துறை.
ஏகப்பட்ட ஜாதிக் கட்சிகள் முளைத்துள்ளதால் தேர்தல் நேரத்தில் ஏற்படும் சிறிய பிரச்சனைகளுக்குக் கூட ஜாதிசாயம் பூசப்படவும் வாய்ப்புள்ளது. இது ஜாதிக் கலவரமாக உருமாறவும் அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
இதனால் கூடுதல் எச்சரிக்கையுடனும், போதுமான அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், அதிக போலீசாரைபணியில் ஈடுபடுத்துமாறும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் உளவுத்துறை ரகசிய அறிக்கை அனுப்பிவைத்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications