இந்தியர்களை நெகிழச் செய்த கிளிண்டன்
கோல்கத்தா:
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளின்டண் குஜராத் பூகம்பத்தில்பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது தொடர்பாக தொண்டு நிறுவனங்களுடன்பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தனது உணவு நேரத்தை ஒதுக்கிவிட்டு மதிய உணவைசாப்பிடவில்லை.
கடந்த ஜனவரிமாதம் 26ம் தேதி குஜராத்தில் ஏற்பட்ட பூகம்ப பகுதிகளை பார்வையிடவந்தார் பில் கிளின்டண். அந்த பகுதிகளை பார்வையிட்ட பின் அவர் சனிக்கிழமை 6மணி நேர சுற்றுப்பயணமாக கோல்கத்தா வந்தார்.
அவர் அன்னை தெரசாவால் துவங்கப்பட்ட கருணை இல்லத்தில் அவர் திட்டமிட்டநேரத்தை விட அதிக நேரம் செலவிட்டார். இதனால் அவர் முன்னதே திட்டமிருந்தபடிதொண்டு நிறுவனத்தாருடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிகழ்ச்சியும் தள்ளிப் போனது.
நேரமின்மை காரணமாக தனது மதிய உணவை உட்கொள்ளாமல் தொண்டுநிறுவனங்களுடன் குஜராத் மக்களுக்கு உதவுவது குறித்து பேச்சு வார்த்தைநடத்திவிட்டு டெல்லி கிளம்பிச் சென்றார் கிளிண்டன்.
மேற்கு வங்காளதில் ராஜ்பவனில் செய்தியாளர்களிடம் கிளின்டண் கூறுகையில்,,குஜராத்தை சீரமைக்க இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு உதவும்விதமாக தேவையான அளவு நிதி வசூல் செய்ய முடியும் என நம்புகிறேன்.
அமெரிக்க வாழ் இந்தியர்கள் அமைப்பு விரைவில் இந்தியாவில் செயல்பட்டுவரும்தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்ய தனி அமைப்பை உருவாக்கும். இந்தஅமைப்பு தேவைப்படும் போதெல்லாம் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவிசெய்யும்.
நிதி உதவி குறித்து அமெரிக்காவில் சாட்டர்ஜி நிறுவனத்தின் தலைவர்கள் ரஜத் குப்தாமற்றும் புரேண்டு சாட்டர்ஜி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.
இது தவிர சுகாதாரம், கல்வி, கிராமப்புற மேம்பாடு போன்றவற்றில் தேவைப்படும்போது உதவி செய்ய வேண்டும் என கோரி பல அமைப்புகளிடமும் பேச்சுவார்த்தைநடத்தியுள்ளோம்.
தொண்டு நிறுவனத்தினர் எங்களிடம் பல திட்டங்களை கூறியுள்ளனர். அது குறித்துநான் அமெரிக்கா சென்ற பின் விவாதித்து முடிவு செய்வேன் என்றார்.
கிளிண்டன் அன்னை தெரசாவால் தொடங்கப்பட்ட கருணை இல்லத்தில் இரண்டு மணிநேரம் செலவிட்டார். இதனால் அவரது ராஜ்பவன் நிகழ்ச்சிகள் தாமதமானது.
18 நகரங்களிலிருந்து வந்திருந்த தொண்டு நிறுவனங்களை சந்திக்கவிருந்தார்கிளிண்டன். கருணை இல்லத்தில் அதிக நேரம் செலவிட்டதால் தாமதமான தனதுநேரத்தை சரி செய்ய மதிய உணவை புறக்கணித்து விட்டு தொண்டுநிறுவனத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின் அவர் தனி விமானம்மூலம் டெல்லி கிளம்பி சென்றார்.
இந்நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபரின் இந்திய சுற்றுப்பயணம் அமெரிக்கசெய்தித்தாள்களில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இதில் முக்கியமாக குஜராத்தில்பூகம்பம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் வசதியான மற்றும் ஏழை மக்கள்கிளிண்டனுக்கும் கொடுக்கும் மரியாதை முக்கியமான செய்தியாக இடம்பெற்றிருந்தது.
குஜராத்தில் சீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெறாததையும் பத்திரிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. கிளிண்டன் சுற்றுப்பயணத்தால் அவை வேகப்படுத்தப்படலாம் எனமக்கள் நம்புவதாகவும் அமெரிக்கப் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications