கோவை: 12 தொகுதிகளில் போட்டியிட 131 மதிமுகவினர் விண்ணப்பம்
கோவை:
கோவை மாவட்டத்தில் உள்ள 12 சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிட 131 மதிமுக வினர் சீட் கேட்டுவிண்ணப்பித்துள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து மதிமுக விலகித் தனித்துப் போட்டியிடமுடிவு செய்தது. இந்த முடிவின் படி பாரதிய ஜனதாக் கட்சி அல்லாத தொகுதிகளில் போட்டியிட மதிமுக முடிவுசெய்தது.
இதன்படி பா.ஜ போட்டியிடும் 21 தொகுதிகள் தவிர பிற தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்தேர்வை மதிமுக செய்து வருகிறது. வேட்பாளர் பட்டியலை கோவையில் நடக்கும் கூட்டத்தில் அறிவிக்க மதிமுகமுடிவு செய்துள்ளது. எனவே, அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கட்சியிலிருந்து சீட் கேட்டு விண்ணப்பித்துவருகின்றனர்.
கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை பாரதிய ஜனதாக் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகளில் மதிமுகபோட்டியிடாது. மீதமுள்ள 12 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனுக்களை கட்சியினர் பெற்றனர். இதில்,வேட்பு மனுக் கட்டணமாக ஒவ்வொரு வேட்பாளருக்கும் ரூ. 2000ம், மகளிர் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்குஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள 12 தொகுதிகளில் போட்டியிட 131 மதிமுகவினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.இதற்கான நேர்காணலும் நடந்தது. நேர்காணல் குழுவில் தலைமைக் கழக செயலர் நாச்சியப்பன், ஆர்.டிமாரியப்பன், செழியன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
அதிகபட்சமாக சிங்காநல்லூர் தொகுதியில் பேட்டியிட 24 மதிமுகவினர் விருப்பம் தெரிவித்து மனுச்செய்திருந்தனர். இதற்கு அடுத்து தொண்டத்தூரில் 18 பேரும், பல்லடத்தில் 16 பேரும், பேரூர் தொகுதிக்கு 11பேரும் இதரத் தொகுதிகளில் போட்டியிட தலா ஒவ்வொரு தொகுதியிலும் 5 அல்லது 6 பேர் மனுச் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications