மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள்
சென்னை:
ஜெயலலிதா தங்களுக்கு ஒதுக்கிய 8 தொகுதிகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புக் கொண்டுள்ளது.
அதிமுக அணியில் இடம் பெற்றுள்ள த.மா.கா, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை எங்களுக்கு இந்தத்தொகுதிகள் வேண்டும், அந்தத் தொகுதிகள் வேண்டும் என ஜெயலலிதாவிடம் கோரி வருகின்றன. இந் நிலையில்அவர்களை கலந்து கூட பேசாமல் அதிமுக இந்தந்த தொகுதியில் போட்டியிடும் என ஜெயலலிதாஅறிவித்துவிட்டார்.
இதையடுத்து அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பிப் போய் இந்தக் கட்சிகள் நிற்கின்றன.
ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்களுக்கு அதிமுக ஒதுக்கிய 8 தொகுதிகளையும் ஒப்புக்கொண்டுவிட்டது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகபொதுச் செயலாளர் சங்கரய்யாவும் திங்கள்கிழமை கையெழுத்திட்டனர்.
இதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பெரம்பலூர் (ரிசர்வ்ட்), சிங்காநல்லூர், விலவங்கோடு, மதுரை கிழக்கு,திண்டுக்கல், திருவெரும்பூர், திருவாரூர் (ரிசர்வ்ட்), திருவட்டாறு ஆகிய தொகுதியில் போட்டியிடவுள்ளது.












Click it and Unblock the Notifications