பா.ஜ.க.-திமுக இடையே பிளவை உருவாக்க வைகோ சதி- கருணாநிதியின் புதிய குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

பாரதீய ஜனதாவுக்கும் திமுகவுக்கும் இடையே பிளவை உருவாக்க வைகோ முயல்வதாக முதல்வர் கருணாநிதிகுற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்குவதற்காக வந்த கருணாநிதி நிருபர்களிடம் பேசுகையில்,

உண்மையில்லாத தகவல்களைக் கூறி பா.ஜ.க-திமுக இடையே பிளவை உருவாக்க வைகோ முயல்கிறார். தேசியஜனநாயகக் கூட்டணியின் கூட்டங்களை திமுக கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வருகிறது என வைகோகூறியுள்ளார். ஆனால், திருச்சியில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பேரணியில் அமைச்சர் ஆலடி அருணாகலந்து கொண்டார்.

பெங்களூரில் நடந்த பேரணியில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை. ஏனெனில் எங்களுக்கு அழைப்பு ஏதும்வரவில்லை. அப்படியே அழைப்பு வந்தாலும் எல்லா கூட்டங்களிலும் எங்களால் கலந்து கொள்ள முடியாது.

வைகோவை நாங்கள் கூட்டணியில் இருந்து நீக்கவில்லை. அவராகத்தான் வெளியே சென்றார்.

அதிமுகவைப் பாருங்கள். அங்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் குறித்து த.மா.கா., கம்யூனிஸ்ட் கட்சிகள்அதிருப்தி தெரிவித்துள்ளன. ஆனால், பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ள தயார் என்று கூறியுள்ளனர்.

ஆனால், அப்படி பேச்சுவார்த்தைக்குக் கூட வைகோ தயாராக இல்லை.

மதிமுக கோரினால் அவர்களுக்காக தேர்தலில் பிரச்சாரம் செய்வோம் என மாநில பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கிருபாநிதி கூறியுள்ளார். ஆனால், திமுகவைத் தான் முழுமையாக ஆதரிப்போம் என மாநில பா.ஜ.கவின் பொதுச்செயலாளர் எல். கணேசன் எங்களுக்கு உறுதிமொழி அளித்துள்ளார்.

சாதிக் கட்சிகளை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். சில நேரங்களில் அது தவிர்க்க முடியாதது. அதேநேரத்தில் மத, சாதி உணர்வுகள் தூண்டப்படாமல் பார்த்துக் கொள்ளப்பட வேண்டியது நமது பொறுப்பு.

பாஜகவின் குழம்பிய நிலையால் திமுகவின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்பட்டிருப்பதாக பத்திரிக்கைகள்எழுதுகின்றன. இதே பத்திரிக்கைகள் விரைவில் திமுக வெல்லப்போகிறது என எழுதுவார்கள்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+