கார்-லாரி மோதலில் 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காரும், லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூர் அருகே நடந்தது.
விபத்து குறித்து போலீஸார் கூறுகையில், திருச்சியிலிருந்து கார் வந்து கொண்டிருக்கும் போது, திண்டிவனத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த லாரிமோதியதில் விபத்து ஏற்பட்டது.
கார் டிரைவல் சேகர் (35) மற்றும் ரக்கீலா பேகம் (45) ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர். ரக்கீலாபேகத்தின் கணவரும், காரில் பயணம் செய்த இன்னொரு பயணியும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications