பாண்டிச்சேரி அதிமுக கூட்டணியில் தொடர்ந்து குழப்பம்
சென்னை:
பாண்டிச்சேரி தேர்தல் கூட்டணி குறித்து பேசி முடிவு செய்ய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாபாண்டிச்சேரி முதல்வர் சணமுகத்துடனும், பா.ம.க. தலைவர் ராமதாசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால்அதில் எந்த விதமான முடிவும் எட்டப்படவில்லை.
தற்போதுபாண்டிச்சேரியில் ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ் தங்கள் ஆட்சியை விட்டுத்தர தயாராக இல்லை.பா.ம.க.வுடனும் ஆட்சி பங்கீடுக்கு தயாராக இல்லை.
ஆனால் ராமதாசுக்கோ பாண்டிச்சேரியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கனவு. அவர்ஜெயலலிதாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் தமிழகத்தில் 27 தொகுதிகளிலும், பாண்டிச்சேரியில் 10தொகுதிகளிலும் பா.ம.க. போட்டியிடும்.
பாண்டிச்சேரியில் சுழற்சி முறை ஆட்சி நடைபெறும். அதில் முதல் இரண்டரை ஆண்டு பா.ம.க. ஆட்சி செலுத்தும்என முடிவானது
காங்கிரஸ் பா.ம.கவுடன் ஆட்சி பங்கீடுக்கு தயாராக இல்லை. ராமதாசும் தன் முடிவை மாற்றிக் கொள்ள தயாராகஇல்லை. இதனால் பாண்டிச்சேரி கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், இந்த மாதம் 4ம் தேதி ராமதாஸ் காங்கிரசுக்கு பாண்டிச்சேரியில் காங்கிரஸ் -த.ம.ாகா இரண்டுக்குமாகசேர்த்து 9 தொகுதிகள் வழங்கப்படும். அ.தி.மு.க. 11 தொகுதிகளில் போட்டியிடும் இது குறித்த முடிவை இரண்டுநாட்களுக்குள் காங்கிரஸ் தெரிவிக்க வேண்டும் கெடு விதித்திருந்தார்.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வந்த பாண்டிச்சேரிமுதல்வர் சண்முகம் திங்கள் கிழமை ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தை குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கையில், ஜெயலலிதாவுடன் நடத்தியபேச்சுவார்த்தையில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. பாண்டிச்சேரி முதல்வர் பாண்டிச்சேரி சென்று விட்டார்என கூறினர்
ஜெயலலிதா காங்கிரஸ் கட்சியினரையும்,ராமதாசையும தனித் தனியாக சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. ஆனால்காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில்,. மூன்று தலைவர்களும் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறினர்.
அவர்ககள் மேலும் கூறுகையில், ராமதாஸ் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்குவதற்கு சம்மதிப்பாரா என்பதுசந்தேகம் எனவும் கூறினார். ஆனால் அதற்கு ராமதாஸ் எந்த விதமான பதிலும் கூறவில்லை என்றனர்.
திங்கள்கிழமை மாலை மீண்டும் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த சண்முகம் முடிவு செய்திருந்தார்.ஆனால் மாலையில் ஜெயலலிதாவை அவர் சந்திக்கவில்லை. முன்னதாகவே அவர் பாண்டிச்சேரி சென்றுவிட்டார்.
பாண்டிச்சேரி செல்லும் முன் பாணடிச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் நாராயணசுவாமியும், பாண்டிச்சேரி முதல்வர்சண்முகமும் த.மா.கா. தலைவர் மூப்பனாரை சந்தித்து பேசினர்.
நாராயணசுவாமி நிருபர்களிடம் கூறுகையில், பாண்டிச்சேரியில் பா.ம.க.வுடன் ஆட்சி பங்கீடு கிடையாது என்றகாங்கிரசின் முடிவில் எந்த விதமான மாற்றமும் கிடையாது என்றார்.
தேர்தலுக்கு இன்னும் 30 நாட்கள்தான் இருக்கும் நிலையில் பாண்டிச்சேரி கூட்டணி குறித்து எந்த முடிவும்ஏற்படவிலலை. பாண்டிச்சேரி கூட்டணியில் தொடர்ந்து கூட்டணி குழப்பம் நீடிக்கிறது. அடுத்த மாதம் 10ம் தேதிதேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications