டான்சி வழக்கு: ஜெ. மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை:
டான்சி நிலப்பேர ஊழல் வழக்கை ரத்து செய்யும்படி ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணைக்கு வந்ததும், நீதிபதி மலை சுப்ரமணியன் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார். பின்னர் வழக்கை ஒத்திவைத்தார்.
முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் டான்சி நிலப்பேரத்தில் ஜெயா பப்ளிகேஷன்ஸ் வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 வருட கடுங்காவல் தண்டனையும், சசிஎன்டர்பிரைசஸ் வழக்கில் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்துத் மூன்றாவது தனி நீதிபதி அன்பழகன் தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த நவம்பர் மாதம் நடந்தது.வழக்கை விசாரித்த நீதிமன்றம் தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்தது. ஆனால் வழக்கு ரத்து செய்யப்படவில்லை.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8 (3) ன் படி ஒருவர் இரண்டு வருடங்களோ அல்லது அதற்கு அதிகமாகவோ தண்டனை பெற்றிருந்தால் அவர்கள், தண்டனைவழங்கப்பட்டிருந்த நாளிலிருந்து 6 வருடங்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது.
இதற்கிடையே ஜெயலலிதா, தமிழகத்தில் மே 10 ம் தேதி நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் போட்டியிட அனுமதியளிக்க வேண்டும் என்றும்,டான்சி வழக்கில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும். வழக்கு ரத்து செய்யப்பட்டால்தான் தன்னால் தேர்தலில்போட்டியிடுவதற்கு தடைகள் இருக்காது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு வேட்மனுத் தாக்கல் வரும் ஏப்ரல் 16 ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 23 ம் தேதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என்பது நினைவிருக்கலாம்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்:
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம்தள்ளுபடி செய்தது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்துவதால் வாக்குப்பதிவில் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அதனால் வாக்குப்பதிவுஇயந்திரத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை ஜெயின் மற்றும் சம்பத் ஆகிய நீதிபதிகள் குழு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் குழு தங்கள் தீர்ப்பில், மின்னணுவாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவதால் வாக்குப்பதிவில் குளறுபடிகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறி ஜெயலலிதா தாக்கல்செய்திருந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications