மீண்டும் ஆட்சியமைக்க கட்டளையிடுங்கள்: பிரசாரத்தை துவக்கினார் கருணாநிதி
ஜாதிக்கட்சிகளை ஊக்குவிக்கிறது திமுக:
ஜாதிக் கட்சிகளை திமுக ஊக்குவிக்கிறது என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். ஜாதி கட்சிகளிடமும்குறைகள் உண்டு. அவற்றை அவர்கள் நீக்க அரசியல் கட்சிகளை நாடும் போது அதற்கு நாம் உதவி புரியவேண்டும்.
ஜாதிக்கட்சிகள் தங்கள் சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டுமெனில்தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும். இந்தக் கோரிக்கையை தேர்தல் அறிக்கையில்சேர்க்க திமுக ஒப்புக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மதவாதக் கூட்டணி என்று பலர் பேசி வருகிறார்கள். தாங்கள் மட்டும்மதச்சார்பற்ற கூட்டணி என்பது போல் பேசி வருகிறார்கள்.
திமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த போது, நாங்கள் சிறுபான்மை மக்களின் நலம் காப்போம். ஜாதி,மத, இன வேறுபாடின்றி அனைவருக்கும் பயன் தரும் வகையில் ஆட்சி புரிவோம். மக்களின் மன உணர்வுகளுக்குமதிப்பு அளித்து ஆட்சி புரிவோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டோம்.
எனக்கு இப்போதுதான் வாஜ்பாயைத் தெரியும் என்று சிலர் பேசி வருகிறார்கள். எனக்கு 1975 ம் ஆண்டேவாஜ்பாயைத் தெரியும். எனக்கு இந்த மொழி பிடிக்காத காலகட்டத்திலும் சரி. இப்போதும் சரி. எனக்குப் பிடித்ததலைவர்கள் வாஜ்பாயும், அத்வானியும்தான்.
பதவிக்காக வாழ்பவன் அல்ல கருணாநிதி:
நான் கட்சிக்காக தியாகத்துடன் வாழ்பவன். பதவிக்காக வாழ்பவன் அல்ல இந்த கருணாநிதி.
என் தாய், தந்தை மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். நான் நாட்டுக்காக வாழ்பவன். என்னைப் பற்றி குமுதம்வாரஇதழ் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.
நான் இந்திராகாந்தி காலத்தில் கறுப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தியதற்காக சிறையில்அடைக்கப்பட்டிருந்தேன்.
அப்போது, என் மகன் ஸ்டாலினுக்கு ஆண் குழந்தை பிறந்தது. நான் சிறையில் இருந்தபடியே ஸ்டாலினுக்குஎழுதிய கடிதத்தில் நாட்டுக்காக நான் இன்று சிறையில் இருக்கிறேன். எதிர்காலத்தில் என் பேரனும் சிறையில்இருக்க வேண்டும் என்று எழுதிய கடிதத்தைத்தான் அவர்கள் செய்தியாக வெளியிட்டிருந்தார்கள்.
வீட்டு வேலையைச் செய்ய எப்படி கற்றுக் கொள்ள வேண்டுமோ, அதே போல் நாட்டு வேலையைச் செய்யவும்கற்றுக் கொள்ள வேண்டும். இது என் வாழ்க்கையின் கடைசி தேர்தல் பயணம். இதில் நீங்கள் இடும் கட்டளையைஏற்று தொடர்ந்து உங்களுக்காகப் பணியாற்றக் காத்திருக்கிறேன் என்றார் கருணாநிதி.
திமுக மாநாடு மற்றும் தேர்தல் பிரசார தொடக்க விழாவில், திமுக தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள்,மத்திய அமைச்சர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications