213 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது மதிமுக
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழக சட்டசபைத் தேர்தலில் 213 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர்வைகோ தெரிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் டெல்லியில் திங்கள்கிழமை நடந்தது. இதில்கலந்து கொண்ட வைகோ கூட்டம் முடிந்தபின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
நாங்கள் தமிழகத்தில் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினாலும் மத்தியில் தொடர்ந்து தேசிய ஜனநாயகக்கூட்டணியில் நீடிப்போம். நாங்கள் ஒரு போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேற மாட்டோம்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம். இதற்கு நல்ல வரவேற்புகிடைத்துள்ளது.
வரும் சட்டசபைத் தேர்தலில் 213 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். பாஜக போட்டியிடும் 21 தொகுதிகளில்நாங்கள் போட்டியிட மாட்டோம். இந்தத் தேர்தலில் மதிமுகவுக்கு வெற்றி உறுதி என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications