பாண்டிச்சேரியில் கட்சி கொடிகளை அகற்றிய தாசில்தாருக்கு அடி- உதை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி பிள்ளையார்தோப்பு பகுதியில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, அரசுக்குச் சொந்தமானகட்டிடங்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின்கொடிகளை அப்புறப்படுத்திய தாசில்தாரை அடையாளம் தெரியாத ஒரு கும்பல் தாக்கியது.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், பிள்ளையார்தோப்பு பகுதியில் பல அரசியல் கட்சிகள் தங்கள்கட்சி கொடிகளை வைத்திருந்தார்கள். அங்குள்ள அரசுக் கட்டிடத்தில் பல அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளும்ஒட்டப்பட்டிருந்தன. தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, அரசுக்குச் சொந்தமான பகுதியில் இது போன்றுசுவரொட்டிகள் ஒட்டக்கூடாது.
மீறி கட்சிகளின் சுவரொட்டிகள் இருந்ததால் தாசில்தார் தட்சிணாமூர்த்தி சிலருடன் சேர்ந்து சுவரொட்டிகளையும்,கொடிகளையும் அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவரை கண்மூடித்தனமாகத் தாக்க ஆரம்பித்தது. இதையடுத்துஅங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தாசில்தார் தட்சிணாமூர்த்தியை அக்கும்பலிடமிருந்துகாப்பாற்றினர் என்றனர்.
முன்னதாக, மாவட்டக் கலெக்டர் அன்பரசு மற்றும் சிலர் இதே பகுதியில் அரசியல் கட்சிகளின் கொடிகளைஅப்புறப்படுத்தும்போது பாண்டிச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாராயணசாமி உள்பட பல அரசியல் கட்சிபிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் கலெக்டரை எதிர்த்து தர்ணாபோராட்டமும் நடத்தினர்.
அப்போது நாராயணசாமி வெளியிட்ட அறிக்கையில், பாண்டிச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு களங்கம்ஏற்படுத்தும் விதத்தில் சுவரொட்டிகளை மாவட்டக் கலெக்டர் சுவரொட்டிகளை அப்புறப்படுத்தி வருகிறார் என்றுகுற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications