சட்டசபை தேர்தல்: 17 முதல் சூறாவளி பிரசாரம் செய்கிறார் கருணாநிதி
சென்னை:
தமிழக முதல்வர் கருணாநிதி வரும் 17 ம் தேதி சென்னையில் தொடங்கி 4 நாட்கள் 4 மாவட்டங்களில் தேர்தல்பிரசாரம் செய்கிறார்.
தமிழகம், புதுவை ஆகிய இரண்டு மாநிலங்களிலும் தொகுதிப்பங்கீடுகளை முடித்து விட்ட கருணாநிதி தேர்தல்பிரசாரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.
அவரது பயணத்திட்டம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
சென்னை சைதாப்பேட்டையிலிருந்து பிரசாரத்தை துவக்கும் கருணாநிதி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,தஞ்சாவூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
17.4.2001: சென்னை சைதாப்பேட்டையில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
தொடர்ந்து ஆலந்தூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி, திண்டிவனம், அச்சரப்பாக்கம், விக்கிரவாண்டி பகுதிகளில் தேர்தல்பிரசாரம் செய்கிறார். விழுப்புரத்தில் இரவு 10 மணிக்கு பிரசாரத்தை முடிக்கிறார்.
18.4.2001: முகையூரில் மாலை 4 மணிக்கு பிரசாரத்தைத் துவக்குகிறார். திருக்கோவலூர், மடப்பட்டு, உளுந்தூர்பேட்டை, வடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் ஆகிய ஊர்களில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு இரவு 10மணிக்கு கடலூரில் முடிக்கிறார்.
19. 4.2001: மாலை 4 மணிக்கு புவனகிரியில் பிரசாரம் செய்யத் தொடங்குகிறார். தொடர்ந்து சிதம்பரம், சீர்காழி,செம்பனார்கோவில், மயிலாடுதுறை, குத்தாலம், திருவிடைமருதூர் ஆகிய ஊர்களில் பிரசாரம் செய்கிறார். இரவு 10மணிக்கு கும்பகோணத்தில் பிரசாரத்தை முடிக்கிறார்.
20.4.2001: 20 ம் தேதி காலை 9 மணிக்கு வலங்கைமானில் பிரசாரம் செய்யத் தொடங்குகிறார். பின்னர்திருவையாறு, பாபநாசம், ஒரத்தநாடு, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, கீரனூர் ஆகிய ஊர்களில்பிரசாரம் செய்கிறார். பின்னர் அதே நாள் இரவு சென்னை திரும்புகிறார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications