நடிகர் பிரபு சென்ற விமானத்தில் வெடிகுண்டு புரளி
சென்னை:
நடிகர் பிரபு கோவை செல்லவிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல்வந்ததையடுத்து, சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையிலிருந்து கோவை செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானம், செவ்வாய்க்கிழமை காலை 11.10 மணிக்குகிளம்பியது.
இந்த விமானத்தில் நடிகர் பிரபு உள்பட 60 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்படும் நேரத்தில் ஜெட் ஏர்வேஸ்விமான நிலையத்துக்கு ஒரு மிரட்டல் தொலைபேசி வந்தது.
தொலைபேசியில் பேசியவர், கோவை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும, அது எந்தநேரத்திலும் வெடித்து சிதறலாம் என்றும் கூறினார்.
இதையடுத்து, ஜெட் ஏர்வேஸ் அதிகாரி விமான நிலைய மேலாளருக்கும், பாதுகாப்பு போலீஸாருக்கும் தகவல்கொடுத்தார்.
உடனடியாக, மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய்ப்படையுடன் பாதுகாப்பு போலீஸார் அங்கு சென்று விமானத்தைசோதனை செய்தனர். விமான பயணிகளின் உடைமைகளையும் சோதனையிட்டனர். அப்போது வெடிகுண்டுஎதுவும் வைக்கப்படவில்லை என்றும், அது வெறும் புரளி என்றும் தெரிய வந்தது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications