காதலியை கொலை செய்த சப் இன்ஸ்பெக்டருக்கு வலைவீச்சு

Subscribe to Oneindia Tamil

சேலம்:

காதலியைக் கொலை செய்து, ரோட்டோரத்தில் வீசிச் சென்று விட்டதாகக் கூறப்படும் சப் இன்ஸ்பெக்டர்தலைமறைவானார். அவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சேலம் ஐ.ஜி ஜெகநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

தர்மபுரி மாவட்டம் பர்கூர் - சென்னை ரோட்டில் ஒரு இளம் பெண் கொலை செய்யப்பட்டு வாகனத்தில் கொண்டுவந்து வீசப்பட்டிருந்தார். அவரது ஒரு கையில் ஆர்.கே. என்ற எழுத்தும், மற்றொரு கையில் கஸ்தூரி என்றும் பச்சைகுத்தப்பட்டிருந்தது.

கடந்த மார்ச் மாதம்த 25ம் தேதி நடந்த இந்த சம்பவத்திற்கு பின்னர், இப்பெண் யார் என்ற விசாரணை துவங்கியது.இதில், இந்த பெண் சேலம் மாவட்டத்தில் பொட்டிகட்டியூர், புக்கம்பட்டி கணேசன் (47), கலா (40)தம்பதியினரின் பெண் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.

கஸ்தூரி (24) என்ற இந்த பெண்ணிற்கும், கொளத்தூர் பகுதியில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தரத்தினம் என்பவருக்கும் இடையே காதல் இருந்து வந்தது தெரியவந்தது.

கரம் பிடித்தால், ரத்தினத்தைத் தான் பிடிப்பேன் என பிடிவாதமாக கஸ்தூரி இருந்து வந்துள்ளார். மேலும்,ரத்தினமும் கஸ்தூரியும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் 2 வயதில்தற்போது ஒரு பெண் குழந்தையும் இருந்துள்ளது. இந்தக் குழந்தை தற்போது ஆதரவற்றோர் நிலையத்தில்இருப்பதாகத் தெரிகிறது.

ரத்தினம், கஸ்தூரியை திருமணம் செய்து கொள்ள மறுத்து வரும் நிலையில், இது குறித்து கஸ்தூரி உயர் போலீஸ்அதிகாரிகளிடம் புகார் செய்ய முயன்றுள்ளார். இதனையறிந்த ரத்தினம், கஸ்தூரியை கொலை செய்திருக்கலாம்என கஸ்தூரியின் தாய், தந்தை மற்றும் தம்பி வாக்கு மூலம் கொடுத்துள்ளனர்.

இதன் அடிப்படையில் ரத்தினத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு தொடரப்பட்டதையடுத்து அவர்சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தார். முன் ஜாமீன் அளிக்க போலீஸ் தரப்பில்எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதால் அவர் தற்போது தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடும் பணியில் போலீசார்மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+