ஜெ.தேர்தலில் போட்டியிட முடியாது என்கிறார் ஆலடி அருணா
சென்னை:
டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தலில்போட்டியிட முடியாது என தமிழ்நாடு சட்ட அமைச்சர் ஆலடி அருணா கூறினார்.
டான்சி நிலப்பேர ஊழல் வழக்கை ரத்து செய்யக் கோரியும், தான் குற்றவாளி இல்லை என்று கூறியும் தீர்ப்புகூறும்படி ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து அவர்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழக்கிறார் என்றார் அவர்.
இதுகுறித்து சட்ட அமைச்சர் ஆலடி அருணா வெளியிட்டுள்ள அறிக்கை:
டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ஜெயா பப்ளிகேஷன்ஸ் வழக்கில் 3ஆண்டு தண்டனையும், சசி என்டர்பிரைசஸ் வழக்கில் 2 ஆண்டு தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இதைநிறுத்தி வைக்குமாறு ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையடுத்து தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தான் தேர்தலில் போட்டியிடும் வகையில்,தான் குற்றவாளி இல்லை என்று கூறும்படி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிமலை சுப்ரமணியம் தள்ளுபடி செய்துள்ளார்.
மேலும் நீதிபதி கூறுகையில், ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா என்பதை தேர்தல் ஆணையம்தான்முடிவெடுக்க வேண்டும்.
டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் குற்றவாளி என்று குற்றம்சுமத்தப்பட்ட தான் தேர்தலில் போட்டியிட தனக்குஅளிக்கப்பட்ட தண்டனை தடையாக இருக்கும் என்று கூறி, தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்துசெய்யும்படியும், தான் குற்றவாளி இல்லை என்றும் கூறும்படி மனுத்தாக்கல் செய்துள்ளார் ஜெயலலிதா.
இந்திய தண்டனை சட்டப்பிரிவு 409 ன்படி, சிறப்பு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம்ரத்து செய்யலாம். ஆனால் இந்த தண்டனை ஊழல்தடுப்பு பிரிவின்கீழ் அளிக்கப்பட்டிருப்பதால்உயர்நீதிமன்றத்தால் தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று கூறி ஜெயலலிதா மனுவை தள்ளுபடிசெய்துள்ளார். இதிலிருந்து ஜெயலலிதா வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தெரிகிறது.
இவ்வாறு ஆலடி அருணா கூறினார்.
யு.என்.ஐ.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications