அதிமுக கூட்டணியில் இ.கம்யூ.போட்டியிடும் தொகுதிகள்
சென்னை:
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 8 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு இந்தியகம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) முடிவு செய்து, இது குறித்தான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் சிபிஐயும் இடம் பெற்றுள்ளது. இந்த கட்சிக்கு 8 தொகுதிகள்ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அந்த கட்சி கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 8 தொகுதிகளை மீண்டும் கேட்டது.ஆனால் அவர்கள் வெற்றி பெற்ற 8 தொகுதிகளிலிருந்து 4 தொகுதிகளை ஒதுக்கி புதிதாக 4 தொகுதிகளையும்ஜெயலலிதா ஒதுக்கினார்.
இதனால் சிபிஐ கட்சியினர் அதிருப்தியடைந்தனர். அவர்கள் முன்பு தாங்கள் வெற்றி பெற்ற திருப்பூர், பெருந்துறைதொகுதிகளை தங்களுக்கு கட்டாயம் ஒதுக்க வேண்டும் என ஜெயலலிதாவை கேட்டுக் கொண்டனர்.
ஆனால் ஜெயலலிதா அவர்கள் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.
இதையடுத்து தங்களுக்கு ஒத்துக்கப்பட்ட தொகுதிகளை ஏற்றுக்கொண்டு, இது குறித்த ஒப்பந்தத்தில் சிபிஐசெயலாளர் நல்லகண்ணுவும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் கையெழுத்திட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்:
1. துறைமுகம்
2. பொன்னேரி (தனி)
3. தளி
4. அரூர் (தனி)
5. வேதாரண்யம்
6. திருத்துறைப்பூண்டி (தனி)
7. மன்னார்குடி
8. கோவில்பட்டி
இந்த தொகுதிகளில் துறைமுகம், பொன்னேரி, அரூர், வேதாரண்யம் ஆகியவை புதிதாக ஒதுக்கப்பட்டுள்ளதொகுதிகளாகும்.
யு .என்.ஐ.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications