ஜெ. போட்டியிட முடியாது... தி.மு.க. நம்பிக்கை
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடக்கிறது அரசியல் கட்சிகள்தொகுதிகள் அடையாளம் காண்பது வேட்பாளர்களை அடையாளம் காண்பது,விளம்பரத்திற்காக சுவர்களை புக் செய்வது என சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன.
ஆனால் இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்ட அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற கேள்விஎல்லார் மனதிலும் நிலவி வருகிறது.
மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி செலுத்த வேண்டுமானால் ஜெயலலிதாதேர்தலில் போட்டியிட வேண்டியது அவசியமானது.
ஆனால் அ.தி.மு.கவின் முக்கியமான எதிர்கட்சியான தி.மு.க. ஜெயலலிதா ஊழல்வழக்குகளில் தண்டிக்கப்பட்டிருப்பதால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது எனநம்புகிறது.
அ.தி.மு.கவின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆருக்குப்பின் அ.தி.மு.கவின் தனிப்பெரும்தலைவராக விளங்கி வருகிறார் ஜெயலலிதா.
அவர் ஆட்சி காலத்தில் ஊழல் செய்ததாக அவர் மீதும், அவரது அமைச்சரவைசகாக்கள் மீதும் ஆளும் தி.மு.க. குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்தது. இதை விசாரிக்கசிறப்பு தனி நீதிமன்றமும் அமைத்தது.
சமீபத்தில் டான்சி நில பேர வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு காலம் சிறைதண்டனை விதித்து சிறப்பு தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஊழல் வழக்கில் 3 ஆண்டோஅல்லது அதற்கு மேலும் தண்டனை வழங்கப்பட்டால் அவர்கள் தேர்தலில்போட்டியிட முடியாது என்று சட்டம் உள்ளது.
இதனால் 3 ஆண்டுகாலம் சிறை தண்டனை வழங்கப்பட்ட ஜெயலலிதா தேர்தலில்போட்டியிட முடியாது என தி.மு.க. நம்புகிறது.
இந் நிலையில் ஜெயலலிதா தனக்கு டான்சி நில பேர ஊழல் வழக்கில் அளிக்கப்பட்டதண்டனையை ரத்து செய்ய வேண்டும்.ஏனென்றால் அப்போதுதான் தேர்தலில்போட்டியிட முடியும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி மலை சுப்ரமணியம் ஜெயலலிதாதேர்தலில் போட்டியிடுவது குறித்து எதுவும் கூற முடியாது. இது குறித்து தேர்தல்ஆணையம்தான் முடிவு செய்யும் என கூறினார்.
ஜெயலலிதா இதே வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யவுள்ளார். அ.தி.மு.கவினர் இந்த வழக்கில் இந்த மாதம் 23ம் தேதிக்குள்சாதகமான தீர்ப்பு வந்துவிடும் என நம்புகிறார்கள். ஏனென்றால் இந்த மாதம் 23ம்தேதிதான் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவிருப்பதால், ஏற்கனவே ஊழல்வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டிருப்பதால் அவரை தேர்தலில் போட்டியிடஅனுமதிக்கக்கூடாது என கோரி தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட உள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க. பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்கட்சியுடன் பலமான கூட்டணி அமைத்துள்ளது.
தி.மு.க, பா.ஜ.கவுடனும், பல ஜாதிக் கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துள்ளது.
தி.மு.க. ஜெயலலிதா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை தங்களுக்கு சாதகமாகபயன்படுத்தி பிரசாரம் செய்ய எண்ணியிருந்தது.
ஆனால் தெஹல்கா டாட் காம் மத்திய அரசில் பங்கேற்றுள்ள அமைச்சர்கள் மீதும்,அரசியல் தலைவர்கள் மேலும், அரசு அதிகாரிகள் மீதும் வீடியோ ஆதாரங்களுடன்ஆயுத பேர ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியது. இது தே.ஜ.கூட்டணி கட்சிகள் ஊழலுக்குஎதிராக பிராசாரம் செய்ய முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலிருந்து முக்கிய கட்சியான ம.தி.மு.க.வெளியேற்றப்பட்டதும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு இழப்பை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
பல கருத்துக கணிப்புகளும் கூட ஜெயலலிதாவே தேர்தலில் வெற்றி பெறுவார் எனகூறி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியுமா இல்லையா என்பதை அவர்போட்டியிடும் தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு செய்ய வேண்டும் என்றுதேர்தல் கமிஷ்னர் சாரங்கி கூறியிருப்பது இதில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications