மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை:
அதிமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 8 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன் விவரம்:
1. திண்டுக்கல்- கே. பாலபாரதி
பெண் வேட்பாளரான இவர் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர். ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர். கவிஞர்,எழுத்தாளர், சிறந்த பேச்சாளர். பெண்களுக்காக பல போராட்டங்கள் நடத்திவர்.
2. மதுரை கிழக்கு- என். நன்மாறன்
கட்சின் மாநிலக் குழ உறுப்பினர். எழுத்தாளர். தமிழ்நாடு முற்போக்குச் சங்கத்தின் எழுத்தாளர் பிரிவின் துணைத் தலைவர்.
3. பெரம்பூர் (ரிசர்வ்ட்) தொகுதி- எஸ்.கே மகேந்திரன்
இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (டி.ஒய்.எல்.எப்.) மாநிலப் பொதுச் செயலாளராக உள்ளார். முதல் முதலாக தேர்தலில்போட்டியிடுகிறார்.
4. திருவாரூர் (ரிசர்வ்ட்) - கே. ரங்கசாமி
வாலிபரான இவர் திருவாரூர் மாவட்ட டி.ஒய்.எல்.எப். பிரமுகர்களில் ஒருவர்.
5. சிங்காநல்லூர்- கே.சி. கருணாகரன்.
கட்சியின் மாநிலக் கமிட்டி உறுப்பினர். கோவை மேற்கு மாவட்ட கட்சியின் செயலாளர்
6. திருவெறும்பூர்- டி,கே. ரங்கராஜன்
கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர். சி.ஐ.டி.யூ. மாநிலப் பொதுச் செயலாளர். மார்க்சிஸ்ட் கட்சியின அகில இந்தியத் துணைத்தலைவர். மிக எளிய மனிதரான அவர் பல நிறுவனங்களில் தொழிற்சங்கங்களுக்குத் தலைவராக இருந்தவர். முதல்முறையாகதேர்தலில் நிற்கிறார்.
7. விளவங்கோடு- டி, மணி (இப்போதைய எம்.எல்.ஏ.)
3 முறை இந்தத் தொகுதியில் வென்றவர். சுதந்திரப் போராட்ட வீரர். கன்னியாகுமரி மாவட்ட செயற்குழு உறுப்பினர்.
8. திருவட்டாறு- ஜே. ஹேமச்சந்திரன் (இப்போதைய எம்.எல்.ஏ.)
கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர். சி.ஐ.டி.யூ. மாநிலத் தலைவர். வழக்கறிஞர். அரசுப் போக்குவகத்துக் கழக தொழிலாளர்சம்மேளனத்தின் மாநிலத் தலைவர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications