த.மா.கா. தொண்டர்கள் போராட்டம்: மூப்பனாருக்கு மேலும் 10 இடங்கள் தர ஜெ. சம்மதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

த.மா.கா. வென்ற 39 தொகுதிகளில் 24 தொகுதிகளை ஜெயலலிதா எடுத்துக் கொண்டதால் த.மா.காவில் கடும் எதிர்ப்புகிளம்பியுள்ளது. அதிமுகவை எதிர்த்துப் போட்டியிட பல த.மா.கா. எம்.எல்.ஏக்களும் முடிவு செய்திருப்பதையடுத்துஜெயலலிதா இறங்கி வந்துள்ளார்.

த.மா.காவுக்கு மேலும் 10 தொகுதிகள் தர அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இப்போது த.மா.கா- காங்கிரஸ் கூட்டணிக்கு 47தொகுதிகளை ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். இதில் பல தொகுதிகளில் த.மா.காவுக்கு வெற்றி வாய்ப்பே இல்லை. காங்கிரஸ்இங்கெல்லாம் நிச்சயம் மண்ணைக் கவ்வும்.

ஜெயலலலிதாவின் செயலால் இப்போது த.மா.கா. எம்.எல்.ஏக்களாக உள்ள 24 பேர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாதநிலை உருவாகிவிட்டது. இவர்கள் மூப்பனாரையும் மீறி தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளனர். இவர்களுக்குதிமுகவிலிருந்தும் உதவி கிடைக்கும் என்று தெரியவந்ததையடுத்து ஜெயலலிதா தனது நிலையிலிருந்து இறங்கி வந்துள்ளார்.

8 மாவட்டங்களில் த.மா.காவுக்கு ஒரு சீட் தூட தராத ஜெயலலிதா அதை சரிகட்ட மேலும் 10 தொகுதிகள் தர முன்வந்துள்ளார்.தனக்கு ஒதுக்கிக் கொண்ட இடங்களில் இருந்து அதை ஜெயலலிதா தருவாரா இல்லை பிற கூட்டணிக் கட்சிகளிடமிருந்து பறித்துஅதை த.மா.கவுக்குத் தருவாரா எனத் தெரியவில்லை.

த.மா.காவிடம் இருந்து பறித்து ராமதாசுக்குக் கொடுத்த 4 தொகுதிகளையும் மூப்பனார் மீண்டும் தனக்கு வேண்டும் எனக் கேட்டுவருகிறார். அப்படி ராமதாசிடமிருந்து சீட்களைப் பறித்து த.மா.கவுக்குத் திருப்பிக் கொடுத்தால் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வேறுஇடங்கள் தந்தாக வேண்டிய நிலைக்கு ஜெயலலிதா தள்ளப்படுவார்.

இப்போது மூப்பனாரை விட மிகவும் குழம்பிப் போயிருக்கிறார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+