த.மா.கா.விலிருந்து நீக்கப்பட்டார் சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும்நீக்கப்பட்டார் தமாகா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம்.

இதுகுறித்து தமாகா ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் மாரிமுத்து சிதம்பரத்துக்கு அனுப்பியுள்ள கடிதம்:

சிதம்பரத்தின் சமீபகால அரசியல் நடவடிக்கைகள் தமாகாவுக்கு எதிராக உள்ளன. கட்சிக்கு எதிராகவும், கட்சித்தலைமைக்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்து வரும் இவரை கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்று தமாகா கட்சியைச் சேர்ந்த 50 மாவட்டத் தலைவர்கள் புகார்கள் அனுப்பியுள்ளனர்.

சிதம்பரம் இனிமேல் கட்சிக் கொடி, கட்சி சின்னம் ஆகிய எதையும் பயன்படுத்தக் கூடாது. கடந்த மார்ச் 21 ம் தேதிநடந்த தமாகா செயற்குழுக் கூட்டத்தில் சிதம்பரத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானம் மூப்பனார்தலைமையில் எடுக்கப்பட்டது.

இதற்காக 6 காரணங்கள் கூறப்பட்டது.

அவைகள் வருமாறு:

1. தேர்தல் பணிக்குழு உறுப்பினராக இருந்து கொண்டு, குழுக் கூட்டங்களில் கலந்து கொண்டு கருத்துக் கூறுவதைவிட்டு விட்டு கட்சிக்கு எதிராக பத்திரிக்கைகள் மூலம் விமர்சனம் செய்வது.

2. தமாகாவுக்கு தலைவர் இருக்கிறார். தலைமை இல்லை என்று அறிக்கை விடுவது.

3. அதிமுகவுடன் கூட்டணி என்று மூப்பனார் எடுத்த முடிவை விமர்சித்தது.

4. தமாகா ஜனநாயகப் பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது.

5. தமாகா கூட்டணி வைத்துள்ள அதிமுக கூட்டணிக்கு எதிராக திமுக கூட்டணியில் சேர்ந்து கொண்டு தமாகாவைவிமர்சித்தது.

6. சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் ரங்கநாதன், சுந்தரம் ஆகியோருடன் கருணாநிதியை சந்தித்துப் பேசி 3தொகுதிகள் வாங்கியது ஆகியவையாகும்.

இதற்கு விளக்கம் கேட்டு மார்ச் மாதம் 25 ம் தேதி உங்களுக்குக் கடிதம் எழுதினோம். அதற்கு உங்களிடமிருந்துபதில் வந்தது.

ஆனால் அந்த பதிலில், கட்சிக்கு எதிராக நடந்து கொண்டது உண்மைதான் என்றும், இருப்பினும் தாங்கள் செய்தசெயல்களை நியாயப்படுத்தும் விதத்தில் பதில் கடிதம் அனுப்பியிருந்தீர்கள்.

அதை மார்ச் 31 ம் தேதி பரிசீலித்த நாங்கள் உங்களைக் கட்சியிலிருந்து நீக்க முடிவு செய்தோம்.

இருப்பினும் மனம் திருந்தி மீண்டும் தமாகாவுக்கு வருவீர்கள். மக்கள் நலம் காக்கப் பாடுபடுவீர்கள் என்றுஎதிர்பார்த்தோம்.

ஆனால் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது மட்டுமின்றி, கட்சிக்கு எதிராக இரண்டுவேட்பாளர்களை அறிவித்தும் விட்டீர்கள். இதனால் இனியும் தமாகா காலதாழ்த்துவது தவறு என்பதால் தங்களைகட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட கட்சியின் முக்கிய பொறுப்புக்களிலிருந்து நீக்குகிறோம் என்றுதனது கடிதத்தில் கூறியுள்ளார் மாரிமுத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+