ஸ்பிக் வழக்கு: ஜெ.க்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு
டெல்லி:
ஸ்பிக் ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சுப்ரீம்கோர்ட்திங்கள்கிழமை ஒத்திவைப்பதாக அறிவித்தது.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கே.டி.தாமஸ் மற்றும் ஆர்.பி.சேத்தி ஆகியோர் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர்களிடம் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா தனக்குஆதரவான சாட்சியங்களை அடுத்த நான்கு வாரங்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும்கேட்டுக் கொண்டனர்.
முன்னதாக இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல்செய்திருந்தனர்.
இதற்கிடையே, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி ஜெயலலிதாவுக்கும், ஸ்பிக் முத்தையாவுக்கும் எதிராகசென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அதன்படி, ஸ்பிக் நிறுவனத்துக்கு அரசு நிறுவனமான டிட்கோவின் பங்குகள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டன.இதனால் டிட்கோவுக்கு (அரசுக்கு) ரூ 77 கோடி நஷ்டம் ஏற்பட்டது. ஜெயலலிதா, ஸ்பிக் நிறுவனத் தலைவர்ஏ.சி.முத்தையா, அவரது தந்தை சிதம்பரம் ஆகியோர் சேர்ந்து கூட்டாக இந்த மோசடியில் ஈடுபட்டனர் எனகுற்றம்சாட்டி பொதுநலன் வழக்கை சுவாமி தொடர்ந்தார்.
இதற்கு ஜெயலலிதாவும், முத்தையாவும்தான் காரணம் என்றும், அவர்களை விசாரிக்கும்படியும் கூறியிருந்தார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா, ராமச்சந்திரன்மற்றும் முத்தையாவுக்கு எதிராகக் ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. பின்னர்இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து ஜெயலலிதா ஆகஸ்ட் 30 ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதன் மீதானவழக்கு விசாரணை நடந்து வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications